சிம்ம ராசியில் பெயர்ச்சியாகும் புதனால் இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!

ஜோதிடத்தின் படி, புதன் பகவான், கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். நவ கிரகங்களில் பேச்சாற்றல், புத்திசாலித்தனம், அறிவு, படைப்பாற்றல், பகுப்பாய்வு திறனை குறிக்கும் ஒரு கிரகமாக புதன் கிரகம் பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும் நபர்கள், தங்கள் புத்திசாலித்தன

By ·

ஜோதிடத்தின் படி, புதன் பகவான், கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். நவ கிரகங்களில் பேச்சாற்றல், புத்திசாலித்தனம், அறிவு, படைப்பாற்றல், பகுப்பாய்வு திறனை குறிக்கும் ஒரு கிரகமாக புதன் கிரகம் பார்க்கப்படுகிறது. ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும் நபர்கள், தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் பேச்சாற்றலால் வாழ்க்கையில் உயர் பதவிகளை அடைகிறார்கள். புதன் தனது ராசியை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார். அந்த வகையில் ஆகஸ்ட் 30, சனிக்கிழமை, கிரகங்களின் அதிபதியான புதன் ராசியை மாற்றுவார். வரும் செப்டம்பர் 15 வரை நீடிக்கும் இந்த சஞ்சாரம். புதனின் ராசி மாற்றத்தால், பல ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைக் காண்பார்கள். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் இது பொற்காலமாய் திகழும். யார் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் காணலாம்.

மேஷம் 

மேஷ ராசியினரின் தொழில் போட்டிகளை குறைக்கும் ஒரு பெயர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. மேஷ ராசியினரின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அனைத்தும் உருவாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். உங்கள் கடின உழைப்புக்கும், அர்ப்பணிக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் அங்கீகாரமும் அந்தஸ்தும் தேடி வரும். குறிப்பாக மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சியால் பல நன்மைகள் உண்டாகும்.

மிதுனம் 

மிதுன ராசியினரின் படைப்பாற்றலை மேம்படுத்தும் ஒரு பெயர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. புதன் கிரகத்தின் குணங்களில் ஒன்றான தொடர்பாற்றல் மேம்படுத்தும் பண்பு, மிதுன ராசியினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கப்படும்‌. குடும்பத்தில் உறவு சுமூகமாக மாறும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். குழந்தை வரம் சம்பந்தமான நல்ல செய்திகளைக் கேட்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் லாபம் தேடி வரும். முதலீடு செய்வதற்கு மிகவும் சாதகமானது. இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் லாபகரமாக இருக்கும்.

சிம்மம் 

புதன் கிரகத்தின் இந்த பெயர்ச்சி சிம்ம ராசியில் நடக்கும் நிலையில், அதிகம் பலனடையும் ஒரு ராசியாக இந்த சிம்ம ராசி பார்க்கப்படுகிறது. சிம்ம ராசியினரின் தொழில் வாழ்க்கை மற்றும் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி கொண்டு வரும் பெயர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் உறவுகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உங்கள் வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்கள். குழந்தைகள் வழியில் இருந்து சுபசெய்திகள் வந்து சேரும்.

துலாம் 

துலாம் ராசியினரின் தொழில் வாழ்க்கையில் அதிஷ்டத்தை அதிகரிக்கும் ஒரு சஞ்சாரம் பார்க்கபடுகிறது. தொழில் காரணத்திற்காக நீண்ட தூர பயணம் ஒன்றை நீங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சண்டை மற்றும் சச்சரவுகள் அனைத்தும் குறையும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் உறவில் இல்லாதவர்களுக்கு விரைவில் காதல் உறவில் இணையும் வாய்ப்பு கிடைக்கும். அனைத்து தொழில்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வீடு, வாகனத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நடவடிக்கைகள் மேம்படலாம். உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு 

பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவியுடன் பல சாதனைகளை புரியும் ஒரு காலமாக இது தனுசு ராசியினருக்கு அமையும். தனுசு ராசியினர் இயல்பாகவே பயணங்கள் மற்றும் சவால்களை சந்திப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். தனுசு ராசியினர் தங்கள் கல்வி வாழ்க்கையிலும் சிறந்து விளங்கும் ஒரு காலமாக இது இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அலுவலக வேலையில் நல்ல பலன் கிடைக்கும். தாயாரின் ஆதரவும் ஆசியும் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிகள்

Recipes AMP · Quick view
View full