ராகு கேது பெயர்ச்சியால் மோசமான பலன்களை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்!!
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்த
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கென தனி சொந்த ராசிகள் கிடையாது. நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், கடந்த மே 18 அன்று நடந்த இந்த மகா-பெயர்ச்சியில், ராகு கும்ப ராசியிலும், கேது கன்னி ராசியிலும் பெயர்ச்சி அடைந்தனர். இப்போது டிசம்பர் 2026 ஆம் ஆண்டில் தான் பெயர்ச்சி அடைவார்கள். தற்போது பலர் அடுத்த 16 மாதங்களுக்கு அதன் மோசமான பலன்களைச் சந்திக்க நேரிடலாம். எனவே யார் இந்த கெடு பலன்களை சந்திக்க போகிறார்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
ராகு கேதுவால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற சச்சரவுகள் மற்றும் தவறான புரிதல்கள் அமைதியின்மையை அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை மோசமடையக்கூடும். உறவுகளில் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதன் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகலாம். வியாபார விஷயங்களில் கவனமாக முடிவெடுக்க வேண்டும். உங்கள் உடல்நிலை மோசமடையலாம். அதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கை மற்றும் உறவுகளில் பாதிப்பு வரலாம் அதனால் பக்குவமாக நடந்து கொள்ளவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராகு-கேது ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துவார்கள். மக்கள் தங்களைத் தூர விலக்கிக் கொள்வார்கள். எல்லா இடங்களிலும் நீங்கள் துன்பத்தை உணருவீர்கள். வேலை செய்யும் திறன் குறையலாம். பண விஷயத்தில் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தை விட்டு தூரமாக இருக்க தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பாக பேசி பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல்நிலை உங்களை கவலைப்பட வைக்கலாம்.
சிம்மம்
ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். திருமண வாழ்க்கையில் மோதல்கள் ஏற்படும், இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தொழில் சிக்கலில் சிக்கக்கூடும். நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு இரண்டு அர்த்தங்கள் வரலாம். குடும்ப உறவுகளில் மனஸ்தாபம் ஏற்படலாம் அதனால் கவனமாக இருக்கவும். வியாபாரத்திற்கும் இது நல்ல நேரம் இல்லை. முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருக்க வேண்டும். திடீரென்று பெரிய செலவுகள் ஏற்படும், கடன் வாங்க வேண்டியிருக்கும். பணத்தை நன்றாக நிர்வகிக்கவும். உடல்நலத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் குடும்ப உறவுகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் பேசுவதன் மூலம் தைரியம் கிடைக்கும். உங்கள் பொருளாதார நிலை மோசமடையலாம். வேலையில் ஆர்வம் குறையலாம். புதிய தொழில் தொடங்க எண்ணம் வரலாம் ஆனால் இந்த காலகட்டத்தில் அமைதியாக இருப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, ராகு-கேது பெயர்ச்சியால் சில சமயங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், சில சமயங்களில் பதற்றத்தையும், சச்சரவையும் தரும். உடல்நலம் மோசமடையக்கூடும். வேலை மற்றும் வியாபாரத்தில் திடீர் பிரச்சனைகள் வரலாம். பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்கள் வேலையை மட்டும் கவனமாக செய்தால் எல்லாம் நல்லபடியநடக்கும். வேலையில் மன அழுத்தம் அதிகமாகலாம். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம் அதனால் பொறுமையாக இருங்கள்.
இதனையும் படியுங்கள் : சனிப்பெயர்ச்சியில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய சில ராசிகள்!!