2025 செவ்வாய் பெயர்ச்சியால் பல பிரச்சினைகளை சந்திக்க போகும் ராசிகள்‌!!

ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மா

By ·

ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியாக இருக்கும் செவ்வாய் கிரகம், வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வியாழக்கிழமை அன்று, கடக ராசியில் நுழைகிறார். இதனால் சில ராசிகளுக்கு, வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும் என ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். இந்நிலையில் மேஷ ராசியினர், உறவுகள் பாதிக்கப்படுவதால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வாகனம் சொத்து சம்பந்தமான தகராறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தைக்கு மருத்துவச் செலவு உண்டாகும். உடல் உபாதை இருந்தால், மருத்துவச் சிகிச்சை மூலமாகக் குணமடையும். சமூகத்தில் பெரிய மனிதர்களுடனான தொடர்பால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். சொன்ன விஷயத்தை சொன்னபடி காப்பாற்ற முடியாமல் தவிப்பீர்கள்.

கடகம்

கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், இவர்களுக்கு நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. மனச்சோர்வு ஏற்படலாம். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. விபத்துக்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அதிகப்படியாக ஏற்பட வாய்ப்பில்லை. வாழ்க்கை துணை ஆரோக்கியத்துக்காக செலவு அதிகமாக இருக்கும். எனவே அதில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளில் எழும் பிரச்சனைகளை தீர்க்க முடியாத சூழல் ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசியினருக்கு செவ்வாயின் பெயர்ச்சி வேலையில் தொழிலில் பிரச்சனைகளை உண்டாக்கும். சக பணியாளர்களால் சிக்கல்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. நிதிநிலை பாதிக்கப்படலாம். நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம். பூர்வீகச் சொத்தில் செலவு ஏற்படும். குழந்தைகளிடம் கோபத்தை தவிர்த்து அன்பாக கொண்டு செல்ல வேண்டும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

மகரம்

மகர ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியினால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. உடல்நல பிரச்சனைகள் வாடலாம். இந்த ராசிக்கு இயல்பாக வரும் வருமானமும் செவ்வாய் பெயர்ச்சியால் குறைய வாய்ப்புள்ளது. தாயாருக்கு வைத்தியச் செலவு ஏற்படும். குடும்பத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தவிர்ப்பது நல்லது. கடனால் அவப்பெயர் வரும். கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அதனால் வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. உதவி செய்ய முன்வருபவர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

இதனையும் படியுங்கள் : அனைத்து ராசிகளுக்கான அதிர்ஷ்ட பரிகாரங்கள்

Recipes AMP · Quick view
View full