2025 க்கான கஜகேசரி யோக பலன்கள்!!

2025 ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ள நிலையில் ஒரு சிலருக்கு யோகங்கள் அதிகமாகவே உள்ளது ஜோதிடத்தில் ஒரு சில கிரகங்கள் ஒன்றாக சந்திக்கும்போது அது மிகப்பெரிய பலன்களை கொடுக்கும். அந்த வகையில் வியாழனும் சந்திரனும் இணையும் போது கஜகேசரி யோகம் உருவாகப் போகிறது. இதனால் 2025 ஆம் ஆண்டில் ஒரு சில ராச

By ·

2025 ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ள நிலையில் ஒரு சிலருக்கு யோகங்கள் அதிகமாகவே உள்ளது ஜோதிடத்தில் ஒரு சில கிரகங்கள் ஒன்றாக சந்திக்கும்போது அது மிகப்பெரிய பலன்களை கொடுக்கும். அந்த வகையில் வியாழனும் சந்திரனும் இணையும் போது கஜகேசரி யோகம் உருவாகப் போகிறது. இதனால் 2025 ஆம் ஆண்டில் ஒரு சில ராசிகளுக்கு நல்ல யோகமும் கிடைக்கும். இந்த வருடம் குரு பெயர்ச்சியுடன் சேர்ந்து கஜகேசரி யோகமும் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கப் போவதால் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவானும் சந்திரனும் மிதுன ராசியில் இணையும் போது ஒரு சிலர் ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. கீழே உள்ளவர்களும் மேலே முன்னேறி வரப் போகிறார்கள் கேசரி என்றால் சிங்கத்தை குறிக்கும். எந்த வகையில் சிங்கத்தைப் போல ராஜாவாக வாழப்போகும் சில ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுன ராசி

மிதுன ராசியில் குரு பகவானும் சந்திரனும் இணைவதால் கஜகேசி யோக பலன்கள் அதிகமாக மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தானாகவே தேடி வரும் கஷ்ட நிலையை அனுபவித்து வரும் நிலை மாறும். நீண்ட காலமாக நம் வாழ்க்கை மாறுமா என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கப் போகின்ற நேரம் தான் இது. கஜகேசரி யோகத்தால் அதிக பலன்களை பெற போகிறார்கள்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி யோகத்தால் உயர் பதவிகளை அடையக்கூடிய வாய்ப்புகளை பெறப் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு தொழிலில் முன்னேற்றம் என அனைத்தும் சாதகமாக இருக்கும். கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டு அதில் மிகவும் முன்னேறி காட்டுவார்கள். அதிர்ஷ்டம் யார் மூலமாக தேடி வரும் என்று கூட தெரியாது.

தனுசு ராசி

தனுசு ராசிக்கு இந்த யோகத்தால் திடீரென அதிர்ஷ்ட மழை பொழியும். தொட்டுதெல்லாம் வெற்றியாக பொன்னான வாய்ப்புகள் தேடி வந்து கொண்டே இருக்கும். ஜாக்பாட் எடுத்தது போல திடீரென அதிர்ஷ்டம் கிடைக்கும். என்னவென்று புரியாத அளவிற்கு நீங்கள் அதிர்ஷ்டம் வழியில் நனைய போகும் யோகத்தை இந்த கஜகேசரி யோகம் கொடுக்கும்.

மீன ராசி

2025 ஆம் ஆண்டு குருபெயர்ச்சியின் பொழுது மீன ராசியினருக்கு கஜகேசரி யோகம் மூலம் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும் இதுவரையில் நீங்கள் பெரிய வகையிலான துன்பத்தில் மாட்டிக்கொண்டிருந்தால் அனைத்து துன்பங்களும் உங்களை விட்டு விலகும். இவ்வளவுதான் வாழ்க்கை என்று நினைத்தவர்களுக்கு புதிய வாழ்க்கை துவங்கும்.

இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சியால் 2025 இல் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!!

Recipes AMP · Quick view
View full