2025ம் ஆண்டு சூரிய கிரகணத்தன்று நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!!
ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபடுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இ
ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபடுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இருக்கிறார். மார்ச் 29, 2025 அன்று, சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29, சனிக்கிழமை அன்று நிகழும். இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு கிரகணம் ஆரம்பம் ஆகி மாலை 6.13 மணி வரை நீடிக்கும். ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம். சனி கொடுக்க எவர் தடுப்பார், சனி தடுக்க எவர் கொடுப்பார் என்ற சொற்றொடர்க்கு ஏற்றவாறு இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு ராசியில் இருக்கும் சனியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தீமைகள் இரண்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சூரிய கிரகணம், சனி பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு நிதி நிலை முன்னேற்றம், தொழில், உடல் நலனில் முன்னேற்றம் காணும் ராசிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தால் சூழல் சாதகமானதாக இருக்கும். உங்களுக்கு இந்த காலத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடு தொடர்பான விஷயத்தில் நல்ல வருமானத்தைப் பெறலாம். குடும்பம், சமூகம் என அனைத்து இடங்களிலும் மரியாதையும் மதிப்பும் வெற்றியும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். பெற்றோரின் வழிகாட்டலும் ஆதரவும் நீங்கள் செய்யும் பணியில் உங்களைப் பாதுகாக்கும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். செல்வம் சேர்ப்பதில் வெற்றி காண்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள். இந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கும் லாபத்தால் வியாபாரத்தை அதிக அளவில் விரிவுபடுத்த வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணி இடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கினாலும், தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பதவி உயர்வுகள் போன்ற பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
மகரம்
சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் ஒரே நாளில் ஏற்படக்கூடிய காரணத்தால் உங்களுக்கு மிகவும் நன்மைகள் நடக்கும். சொத்து தொடர்பான லாபம் கிடைக்கும். திருமண முயற்சியில் நல்ல செய்தி தேடிவரும். உத்யோகத்துறையில் முன்னேற்றம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற வாய்ப்புள்ளது. வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறலாம். வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து அதிக பணம் சம்பாதிக்க வாய்பு கிடைக்கும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 க்கான கஜகேசரி யோக பலன்கள்!!