சனி பெயர்ச்சி பலன்கள் நன்மைகளை மட்டும் பெற போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒவ்வொரு சனி பகவான் இவர் இ

By ·

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒவ்வொரு சனி பகவான் இவர் இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் பயணம் செய்வார் இவருடைய தாக்கம் நீண்ட காலம் இருக்கும். நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர். அந்த வகையில் சனி பெயர்ச்சியால் பல நன்மைகளை பெற போகும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

மகரம்

சனி பகவானின் அருளால், இந்த ராசிக்காரர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான நேரமாக அமையும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீர்ச்சி பெறும். நினைத்த செயலில் வெற்றி, சமுதாயத்தில் அந்தஸ்து பெறும் நிலை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம், சங்கடங்களில் இருந்து விடுதலை. வாகனம் வாங்கும் முயற்சி, தொழில் தொடங்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும்.

கடகம்

சனி பெயர்ச்சியின் காரணமாக, நிதி சிக்கல்கள் குறையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் மன அமைதி அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புத்துணர்ச்சி, நம்பிக்கை பிறக்கும் காலகட்டமாக இருக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

ரிஷபம்

வேலைவாய்ப்பில் பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான சிக்கல்கள் விலகும். புகழும், பெயரும் அதிகரிக்கும். வருமானம் கணிசமாக உயரும். முதலீட்டாளர்களுக்கான இந்த காலம் மிகவும் சாதகமானது. திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். நல்ல வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றும் கிடைக்கும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மிதுனம்

சனி பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். வேலையில்லாதவர்கள் முதல், வேலை இழந்தவர்கள் வரை — அனைவருக்கும் நல்ல பலன்கள் கிட்டும். தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் பண வரவுகள் உண்டாகும். எந்தவொரு காரியத்தைச் செய்தாலும் அதில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். திருமண வயதினருக்கு திருமண யோகம் உண்டாகும்.

கும்பம்

சனி பகவானின் அருளால், வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் நிகழும். தொழில் சார்ந்த பிரச்சனைகள் தீரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சேமிப்பு அளவுக்கு அதிகரிக்கும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சொந்த வீடு கட்டுவது, வாங்குவது, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைப்பது போன்ற அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணங்கள் உண்டாகும்.

இதனையும் படியுங்கள் : சனி பெயர்ச்சி 2025ல் சனியின் அருள் பார்வையை பெற போகும் ராசிக்காரர்கள்!!

Recipes AMP · Quick view
View full