மகர ராசியில் புதன் பெயர்ச்சி இனி இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாற போகிறது!!
2025 ஆம் ஆண்டு புத்துணர்ச்சியுடன் பிறந்திருக்கிறது. புத்தாண்டின் முதல் மாதத்திலேயே புதன் பகவான் தனது இடத்தை மாற்றப் போகிறார். நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக பயணம் செய்யக்கூடியவர் மிகவும் குறுகிய காலத்தில் பயணம் செய்யக்கூடிய கிரக
2025 ஆம் ஆண்டு புத்துணர்ச்சியுடன் பிறந்திருக்கிறது. புத்தாண்டின் முதல் மாதத்திலேயே புதன் பகவான் தனது இடத்தை மாற்றப் போகிறார். நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக பயணம் செய்யக்கூடியவர் மிகவும் குறுகிய காலத்தில் பயணம் செய்யக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மகர ராசியில் சூரியன் பெயர்ச்சியான நிலையில், தற்போது ஜனவரி 24ம் தேதி புதன் பகவான் மகரத்திற்கு மாற உள்ளார். இதனால் உருவாகக்கூடிய புதாதித்ய ராஜ யோகம் உருவாகிறது. மகர ராசிக்குள் நுழையும் புதனால் சில ராசிகள் நற்பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்கப் போகின்றனர். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு, புதனின் பெயர்ச்சி மற்றும் அங்கு உருவாகக்கூடிய புதாதித்ய யோகத்தால் உங்கள் வாழ்க்கையில் பெரியளவில் வெற்றியைப் பெறலாம். வியாபாரம் தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆண்டு நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வித்துறையிலும் முன்னேற்றம் அடையலாம். உங்கள் மனைவியின் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு புதனின் பெயர்ச்சி காரணமாக ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு, வேலை கிடைக்கும். இந்த நேரத்தில், நீங்கள் சகோதர சகோதரிகளிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியில் மூத்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 2025 ஆம் ஆண்டு குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கைக்கு இனிமையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் காதல் துணையுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். பெரிய வேலைகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். காதல் திருமணத்திற்கு செல்லும். வேலை, விளையாட்டில் வெற்றி கிடைக்கும். நீங்கள் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமானது. உங்கள் நிதி நிலை மேம்படும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறலாம். வெளியூர் தொடர்பான வேலைகளில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்கு, புதன் பெயர்ச்சி நன்மைகள் தரும். சொத்து தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் சாதக பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்ககளைச் சந்திக்கும் வாய்ப்பும், அவர்களிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நல்ல லாபம் பெறலாம். உத்தியோகத்தில் இருந்தால் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உறவுகளில் இனிமை இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு, புதன் பெயர்ச்சியால் எதிர்பாராத பல நிதி நன்மைகளைப் பெறலாம். வருமானம் அதிகரிப்பதால், பல நாட்களாக தொடர்ந்த கடனை அடைத்து நிம்மதி அடைவீர்கள். திடீர் பண ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பழைய முதலீடுகளால் ஆதாயம் பெறுவார்கள். செல்வம் பெருகும். உங்களின் பணித்திறன் அதிகரிக்கும் மற்றும் கடினமான வேலைகள் கூட எளிதாக முடிவடையும். இந்த நேரம் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்