செவ்வாய் பெயர்ச்சி இனி இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வம் சேரும்!!

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்த

By ·

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கோபத்தின் நாயகனாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது செவ்வாய் மிதுன ராசியில் இருக்கிறார். ஏப்ரல் 3, 2025 அன்று வியாழக்கிழமை அதிகாலை 1:56 மணிக்கு, செவ்வாய் கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இவர்கள் அதிகப்படியான நற்பலன்களை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த காரணத்திற்காக, செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதனுடன், சொத்து தொடர்பான நன்மைகளும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலாளர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள் தொழில் முன்னேற்றத்தை அடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் பெயர்ச்சி 12வது வீட்டைப் பாதிக்கும். இது வெளிநாட்டுப் பயணம் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் குடியேற விரும்புவோருக்கு இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப வாழ்க்கை முன்னேற்றம் அடையும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் செவ்வாய் பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.

மீனம்

செவ்வாய் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களின் ஐந்தாம் வீட்டில் நடைபெறும். இந்தக் காரணத்தினால், மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்ம். அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கான முழு வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழிலில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்க கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : சுக்கிரன் வக்ர பெயர்ச்சி இனி இந்த ராசிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் தான்!!

Recipes AMP · Quick view
View full