செவ்வாய் பெயர்ச்சியால் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்கப் போகும் ராசிக்காரர்கள்!!
ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மா
ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் செவ்வாய், சூரியனின் ராசியான சிம்ம ராசிக்கு செல்கிறார். வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி வரை செவ்வாய் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். வீரத்தை கொடுக்கும் செவ்வாய் கிரக பெயர்ச்சி குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு பெரிய வாழ்க்கை மாற்றங்களை தரும். இவர்களது வாழ்வில் பொற்காலம் தொடங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் காணலாம்.
சிம்மம்
செவ்வாய் சிம்ம ராசியில் நுழைவது பலருக்கும் சக்தி, ஆற்றல் மற்றும் நன்மைகளை தருகிறது. தொழில் சவால்கள் விலகி வெற்றியடையும் நேரமாக இது அமைகிறது. வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் மெல்ல மெல்ல நீங்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதனுடன், சொத்து தொடர்பான நன்மைகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்ம். அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கான முழு வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இடம்பெயர்வால் மேம்பட்ட அனுபவங்களை சந்திப்பார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற முன்னேற்றங்கள் அமையும். வேலையில் சம்பள உயர்வு பதவி உயர்வு காரணமாக, வருமானம் அதிகரித்து நிதி நிலைமை மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டு வசதிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். சிலருக்கு வேலை தொடர்பாக வெளியூர், வெளிநாடு பயணம், ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை உறுதியடையும். வேலை தொடர்பான தொந்தரவுகள் நீங்கி, நிலைத்த நிலை உருவாகும். சிறிது காலமாக இருந்து வந்த உடல்நல பிரச்சினைகள் நீங்கும். அசையா சொத்துக்கள் வாங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் குடியேற விரும்புவோருக்கு இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் ஞானத்துடன் செயல்படவும். வேலையை முடிப்பதில் உள்ள தடைகள் விலகும்.
விருச்சிகம்
விருச்சிகரின் சமூக மரியாதை உயரும். நண்பர்கள், குடும்பத்துடன் சேர்ந்து நல்ல முயற்சிகள் தொடங்கும். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகள் தரப்பிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் ஏற்படும் தடைகளை வென்று காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று நிதி ஆதாயம் கிடைக்கக்கூடும். வணிக ரீதியான முடிவுகள், செயல்பாடு பெரிய நற்பலனை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கு பரிசாக வெற்றியும், பண வருமானமும் கூடும். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றியும் சமூக மரியாதையும் உயரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். போட்டியாளர்களை முந்தி சென்று சாதனை படைப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். புதிய நண்பர்கள், வழிகாட்டிகள் கிடைப்பார்கள்.
இதனையும் படியுங்கள் : சனி பெயர்ச்சி பலன்கள் நன்மைகளை மட்டும் பெற போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!