புதாதித்ய ராஜயோகத்தால் தலைகீழாக மாறப் போகும் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கை!!

புதன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டு கிரகங்களும் கும்ப ராசியில் ஒன்றாக இணைய போவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த யோகம் சுபமான யோகமாக கருதப்படுகிறது இது பலருடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாளை மறுநாள் கும்ப ராசியில் சூரியன் மற்றும் புதன் போன்ற இரண்டு கிரக

By ·

புதன் மற்றும் சூரியன் ஆகிய இரண்டு கிரகங்களும் கும்ப ராசியில் ஒன்றாக இணைய போவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த யோகம் சுபமான யோகமாக கருதப்படுகிறது இது பலருடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாளை மறுநாள் கும்ப ராசியில் சூரியன் மற்றும் புதன் போன்ற இரண்டு கிரகங்களும் இணைவதால் நான்கு ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கை மொத்தமாக மாறும். அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை தொழில் அனைத்திலும் பணம் அதிகமாக சேரும். பல இடங்களில் இருந்து வருமானங்கள் வந்து சேரும். கல்வி அல்லது போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருவதற்கு இந்த நேரம் சிறந்த நேரமாக அமைந்து, போற்றி தீர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வெற்றி வாய்ப்பு உங்களுக்கு அதிகமாகும். திருமண வாழ்க்கையும் இனிமையாக அமையும்.

கன்னி ராசி

புதாதித்ய ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும். பல நல்ல செய்திகள் உங்கள் காதுகளுக்கு வந்து சேரும். பணி செய்யும் இடத்தில் முதலாளி நம்பிக்கையை பெற்று சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவற்றை அடைவீர்கள். பணபுழக்கம் உங்களுக்கு திடீரென அதிகமாகும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் கையில் எடுக்க கூடிய அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும். சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். மிகவும் பிரபலமானவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு அதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு பல நன்மைகளும் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் பணமும் உங்களுக்கு அதிகமாகவே சேரும். நீண்ட நாட்களாக வராமல் இருக்கும் பணம் உங்களைத் தேடி வரும்.

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்புக்கும் பணப்புழக்கத்திலும் எந்த குறையும் இருக்காது. வாழ்க்கையில் புதிய பாதைகள் திறந்து உங்களுடைய கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றி நிச்சயமாக கிடைக்கும். எப்பொழுதும் நம்பிக்கையை கைவிடாமல் இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு நல்லதே நடக்கும்.

இதனையும் படியுங்கள் : சனி பெயர்ச்சி பலன்கள் 2025

Recipes AMP · Quick view
View full