கடகத்தில் குரு பெயர்ச்சி இனி இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி குரு தனுசு மற்றும் மீன ராசிகளை ஆளும் கிரகமாகக் கூறப்படுகிறது. குரு ஒரு வருட இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறார். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர் அக்டோபர் 19, 2025 அன்று அதிசாரி சஞ்சாரத்துடன் குரு தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் பெயர்ச்சி அடைவார். சந்திரன் கடகத்தின் அதிபதி. கடக ராசியில் குருவின் வருகை சுப பலனைத் தரும். கடக ராசியில் குருவின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நன்மை தரும். அந்த வகையில் குரு பகவான் மங்களகரமான பலன்களை பெற போகும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
குரு கடக ராசியில் பெயர்ச்சி அடைவாதல் மேஷ ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கக்கூடும். பணியிடத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீடு, மனை, வாகனம் வாங்கும் உங்கள் கனவு நிறைவேறும். உங்களின் வேலையில் துரிதமாக செயல்படுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
சிம்மம்
குரு பெயர்ச்சியால், சிம்ம ராசிக்காரர்கள் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பார்கள். நிதி நன்மைகளைப் பெறலாம். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிதி ஆதாயமும் பெருகும். பயண வாய்ப்புகள் உண்டாகும். நல்ல செய்தி கிடைக்கலாம். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வேலை தேடுபவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
துலாம்
குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறலாம். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். முக்கியமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். போட்டி தேர்வு தொடர்பான விஷயத்தில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம், கட்டிடம், வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகம்.
விருச்சிகம்
குருவின் ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். அதிர்ஷ்டம் பெருகும். நிலுவையில் உள்ள வேலைகள் முழுமையாக நிறைவடையும். மத மற்றும் சமூகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு, நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இந்தப் பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து ஐந்தாவது வீட்டில் நடக்கக்கூடும். எனவே, இந்த நேரத்தில் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறலாம். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். பழைய திட்டங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிலுவையில் இருந்த சில வேலைகள் முடிவடையும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயத்திற்கான அறிகுறிகள் உள்ளன. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 சனி குரு ராகு கேது பெயர்ச்சிகள்