2025 சனிப்பெயர்ச்சி மற்றும் மற்ற பெயர்ச்சிகளால் மார்ச் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகள்!!

2025 இல் சனிப்பெயர்ச்சி யோடு சேர்த்து மற்ற சில கிரக பயிற்சிகளும் நடக்கப் போகிறது. மார்ச் மாதத்தில் சூரியன் சுக்கிரன் புதன் சனி போன்ற நான்கு கிரக பெயர்ச்சிகள் நடக்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொருளாதார நிலை என ஒரு சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மாறப் போகிறது. மார்ச்

By ·

2025 இல் சனிப்பெயர்ச்சி யோடு சேர்த்து மற்ற சில கிரக பயிற்சிகளும் நடக்கப் போகிறது. மார்ச் மாதத்தில் சூரியன் சுக்கிரன் புதன் சனி போன்ற நான்கு கிரக பெயர்ச்சிகள் நடக்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொருளாதார நிலை என ஒரு சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மாறப் போகிறது.

மார்ச் மாத கிரக பெயர்ச்சிகள்

மார்ச் இரண்டாம் தேதி சுக்கிர பகவான் மீன ராசியில் இருந்து வக்கிர பெயர்ச்சியை தொடங்கப் போகிறார். மார்ச் 14ஆம் தேதி சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். வாட்ச் 15ஆம் தேதி புதன் பகவான் மீன ராசியில் வக்கிரப் பெயர்ச்சியை தொடங்கப் போகிறார். மார்ச் 29ஆம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். இந்த பெயர்ச்சிகளால் சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு மார்ச் மாதத்தில் இந்த பெயர்ச்சிகளால் செல்வாக்கு மற்றும் தைரியம் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்களை நடத்தி முடிப்பதில் தைரியம் அதிகரிக்கும். உங்களின் முடிவு எடுக்கும் திறன் துணிச்சல் ஆகவும் சிறப்பாகவும் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலனை அடைவீர்கள் நிதிநிலை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய முக்கிய வேலைகளை முடிப்பதில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும் பயணங்கள் மூலம் சில வெற்றிகள் கிடைக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு மார்ச் மாதத்தில் பலவிதத்தில் நன்மைகள் கிடைக்கும் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். வேலை தொழில் தொடர்பாக நீங்கள் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில்நுட்ப ரீதியான வேலைகளில் உள்ளவர்கள் பயனடைவார்கள். வேலை மற்றும் வணிக வர்க்கத்தினருக்கு நிலைமை சாதகமாக அமையும். சேமிப்பு சொத்து போன்ற விஷயங்களில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும் முன்னோர்களின் சொத்துக்கள் மூலம் நன்மை கிடைக்கும்.

கடக ராசி

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு மார்ச் மாதத்தில் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் முன்னேற்றம் அமையும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும் வேலை பார்க்கக்கூடிய இடத்தில் உங்களுடைய திறமைக்கு பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் சிறப்பான முடிவுகள் கிடைக்கக்கூடிய காலம் மாதத்தின் இரண்டாம் பகுதியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய வருமானம் முன்பை விட உயரும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்கு மார்ச் மாதம் பல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும் பொருளாதார நிதி நிலைமை தொடர்பான முயற்சிகள் முன்னேற்றம் தரும். உங்களுடைய இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படும். வேலை தொடர்பான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும் வருமானமும் அதிகரிக்கும். படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அது முன்னேறுவதற்கு சில முயற்சிகளை எடுத்து வெற்றியும் அடைவார்கள்.

மீன ராசி

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு நிதி மற்றும் பொருள் வசதிகள் அதிகரிக்கும். அனைத்து நோக்கங்களும் நிறைவேறும் கடினமான சூழல்கள் விலகி திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும். திருமண பேச்சுக்களில் முன்னேற்றம் கிடைக்கும். இந்த மாதத்தில் எந்த ஒரு வேலை செய்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் முதலாளிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இதனையும் படியுங்கள் : சனிப்பெயர்ச்சியால் மார்ச் 29ஆம் தேதிக்கு பிறகு மிகப்பெரிய மாற்றத்தை பெற போகும் ராசிகள்!!

Recipes AMP · Quick view
View full