30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரி தஷாங்க் யோகத்தால் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!!

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு சில கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். அந்த வகையில் கர்ம வினை கடவுளான சனி பக

By ·

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு சில கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். அந்த வகையில் கர்ம வினை கடவுளான சனி பகவான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் குரு பகவானுடன் 108 டிகிரி கோணத்தில் தொடர்பை உண்டாக்கி, சுபிக்ஷமான திரி தஷாங்க் யோகத்தை உண்டாக்குகிறார். வேத ஜோதிடத்தில் இது அரிய ஒரு கிரக நிலை மாற்றமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படுகிறது. ஆனால் இந்த 4 ராசிகள் இந்த நேரத்தில் திடீர் நிதி ஆதாயம் மற்றும் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. யார் இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

ரிஷபம் 

திரி தஷாங்க் யோகதின் பலனாய் ரிஷப ராசியினர் தங்கள் தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த பலன்களை காண இருக்கின்றனர். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் விரைவில் முடிவடையும். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் பிறக்கும். வருமானம் பெருகும், நிதி நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்களிலும் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும்.

மிதுனம் 

சனி, குரு உண்டாக்கும் இந்த திரி தஷாங்க் யோகம், மிதுன ராசியினரின் தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் காணப்பட்ட பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும். வங்கி கடன்களுக்கு முடிவு கட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். புதிய தொடக்கத்திற்கான ஒரு காலமாக இது பார்க்கப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்த்து உயரும். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்க, வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி யோகம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் சிறப்பாக கிடைக்கும்.

தனுசு 

திரி தஷாங்க் யோகத்தின் பலனாய் தனுசு ராசியினர் தங்கள் தொழில் வாழ்க்கையில் ஏற்றம் காணும் வழிகளை கண்டறிவார்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அலுவலக பணி மேற்கொள்பவர்களுக்கு அதிகாரிகளின் உதவியுடன் தங்கள் செயல் திட்டங்களை செயல்படுத்துவார்கள். குழந்தைகள் வழியே நல்ல செய்தி கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுலபமாகும். தொழில் வாழ்க்கையில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மகரம் 

மகர ராசியினருக்கு இந்த திரி தஷாங்க் யோகம் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் காக்கும் செயல்களை செய்கிறது. நாள்பட்ட நோய் பிரச்சனைகளில் இருந்து சற்று நிவாரணம் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் கணவன் – மனைவி இடையே காணப்பட்ட மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். குழந்தை பாக்கியம் தொடர்பான நற்செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம். பன்னாட்டு தொழிலில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டில் வாய்ப்புகளை பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் வழியாக நற்செய்திகள் வரும். சிக்கிக் கடந்த பணம் உங்களை வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

இதனையும் படியுங்கள் : குரு மற்றும் சனி பகவான் பெயர்ச்சி 2025

Recipes AMP · Quick view
View full