ராகு கேது பெயர்ச்சி 2025!! இனி வாழ்க்கையில் ஏற்றத்தை காண போகும் ராசிக்காரர்கள்!!
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்த
நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கென தனி சொந்த ராசிகள் கிடையாது. நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், சர்ப்ப கிரகங்களான ராகு – கேது மே மாதம் 18ம் தேதி மாலை 4.30 மணிக்கு பெயர்ச்சியாக உள்ளனர். ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் மாற உள்ளதால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகும் ராசிகள் யார் என தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி, செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். வேலையில் தொழிலில், எதிர்பார்த்த முன்னேற்றமும் வருமானமும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். அதற்கு முழு ஆதரவு நிறைந்ததாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி மனதிற்கு தைரியத்தையும் உறுதியையும் கொடுக்கும். இதனால் சதிகளை வென்று, நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். இத்துடன் பணியிடத்திலும் கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் மரியாதை கிடைக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தின் காலம் தொடங்கும். நீண்ட காலமாக இருக்கக்கூடிய நோயிலிருந்து நிவாரணம் அடைவீர்கள்.
கடகம்
கடக ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி, பொருளாதார நிலையை உயர்த்தும். கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையில், தொழிலில், புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். இது முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் வெற்றியின் ஒரு புதிய காலகட்டம் தொடங்கும். மேலும், பதவி உயர்வு சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் அடுத்த கட்ட வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி, அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும். பண வரவு நிதி நிலையை உயர்த்தும். இதனால் கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பழைய கடன்களில் இருந்து விடுபடுவார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தக் காலக்கட்டத்தில் வாட்டி வந்த நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வேலை செய்பவர்களுக்கு நல்ல காலம் இருக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வரும் வழக்குகள் முடிந்து நிம்மதி அடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசியினருக்கு ராகு கேது பெயர்ச்சி, வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். பண வரவின் மூலம், ஆடம்பர வசதிகளை பெறுவீர்கள். உங்கள் வருமானமும் நன்றாக இருக்கும். மொத்தத்தில், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்டு வந்த வேலைகளை முடிக்க முடியும்.
இதனையும் படியுங்கள் : சுக்கிரன் வக்ர பெயர்ச்சி இனி இந்த ராசிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் தான்!!