புதன் பெயர்ச்சியால் ராஜயோகம் கிடைக்கப் போகும் சில ராசிகள்!!
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் ராசியை மாற்றுகின்றன நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகளுக்கு நல்லவையும் நடக்கும் ஒரு சில ராசிகளுக்கு சில சுப பலன்களும் நடக்கும். கடந்த ஜனவரி 4ஆம் தேதி புதன் தனுசு ராசியில்
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் ராசியை மாற்றுகின்றன நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகளுக்கு நல்லவையும் நடக்கும் ஒரு சில ராசிகளுக்கு சில சுப பலன்களும் நடக்கும். கடந்த ஜனவரி 4ஆம் தேதி புதன் தனுசு ராசியில் இருந்து பெயர்ச்சியானார் ஒன்பது கிரகங்களுடன் அரசனாக கருதப்படுகிற சூரிய பகவான் இந்த ராசியில் இருப்பதால் இந்த இரண்டு கிரகங்களுடன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவானது. அதன் பிறகு ஜனவரி 14-ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிகள் பெயர்ச்சியாளர் 24 ஆம் தேதி புதன் பகவானும் மகர ராசிக்குள் நுழைவதால் மகரத்திலும் புதாதித்ய யோகம் உருவாகும். புதன் பயிற்சி மற்றும் புதாதித்ய யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிகமான நல்ல பலன்கள் ராஜயோகம் கிடைக்கப்போகிறது அதனை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள் நிதிநிலைமைகள் நன்றாக இருக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும் எதிர்பார்க்கக் கூடிய இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். படிப்பிலும் ஆர்வம் அதிகரிக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்கும். தந்தையின் உதவியோடு பல பணிகளை முடிப்பீர்கள். முதலீட்டில் இருந்து லாபம் கிட்ட வாய்ப்பு கிடைக்கும் உங்களுடைய வேலைகள் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு அதிகமாக உதவுவீர்கள். உங்களுடைய குழந்தைகளின் சாதனைகளைப் பற்றி பெருமைப்படுங்கள். வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு இருக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பல நன்மைகளை அளிக்கும் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான வேலைகளை நீங்கள் செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு அதில் நல்ல பலன்கள் கிடைக்கும் வேலை பார்க்கக்கூடிய இடத்தில் அதிருப்தி அடைந்தவர்களுக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். அதனால் நீங்களும் திருப்தி அடைவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நன்மையை அளிக்க கூடியதாக இருக்கும். வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் வசதிகள் அதிகரிக்கும் பண வரவும் அதிகரிக்கும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி லாபகரமானதாக அமையும். பதவி மற்றும் கௌரவம் அதிகரிக்கும். வேலை பார்க்கக்கூடிய இடத்தில் கடின உழைப்பை போட்டால் உங்களுடைய சக ஊழியர்களுடைய பாராட்டுகளையும் மேலதிகாரிகளுடைய பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சாற்றல் மேன்மையடையும். எதிரிகளை சமாளிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்திலும் நல்ல உயர்வு ஏற்படும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய துணையுடன் உறவு வலுவாகும். சமுதாயத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக பணவரவு அதிகரித்து செலவுகளையும் கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்திலும் கவனமோடு இருப்பீர்கள்.
கும்ப ராசி
புதன் பெயர்ச்சியின் தாக்கத்தினால் பல நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல உறவு ஏற்படும் இருவருக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உறவுகளும் வலுவாகும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 சனி குரு ராகு கேது பெயர்ச்சிகள்