சனி பெயர்ச்சி 2025ல் சனியின் அருள் பார்வையை பெற போகும் ராசிக்காரர்கள்!!

ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபடுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இ

By ·

ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கபடுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இருக்கிறார். மார்ச் 29, 2025 அன்று, சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம். சனி கொடுக்க எவர் தடுப்பார், சனி தடுக்க எவர் கொடுப்பார் என்ற சொற்றொடர்க்கு ஏற்றவாறு இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு ராசியில் இருக்கும் சனியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தீமைகள் இரண்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்டட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் மகிழ்ச்சியைப் பொழிவார். உங்கள் ஜாதகத்தில் சனி மற்றும் குருவின் நல்ல நிலை காரணமாக, வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். பொருளாதாரத்தில் இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் விலகி விடும். அரசு வகையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சுயதொழில் செய்து வருபவர்கள் லாபம் காண்பார்கள். பொன் பொருள் சேர்க்கையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாத சனி பெயர்ச்சியும், மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி நட்சத்திர பெயர்ச்சியும் அனுகூலமான நன்மைகளை அளிக்கும். சனி அருளால் 2025 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இதுவரை இருந்த பாதிப்புகள் எல்லாம் விலகும். விரும்பிய யாவும் இனி கைக்கு வந்து சேரும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். மற்றவர்களால் முடியாதவற்றை எல்லாம் முடித்துக்காட்டும் வல்லமை உண்டாகும். சகோதரர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வெற்றி காண்பீர்கள்.

கன்னி

கன்னி சனி பகவான் பிப்ரவரி 2025 இல் குருவின் நட்சத்திரத்தில் பெயர்ச்ச்சி ஆகிறார். இது கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு அதிகமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். உறவினர்கள் மதிக்கும் நிலை உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். அரசு ஊழியர்களுக்கு செல்வாக்கு உயரும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் காலமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி அனுகூலமான பல நன்மைகளை அளிக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். பல வித வெற்றிகளை காண்பீர்கள். இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியால் இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சிகள் வெற்றியாகும். கடன்களால் ஏற்பட்ட அவமானம் மறையும். அரசு ஊழியர்களின் செல்வாக்கு உயரும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் பெறும் காலமாக அமையும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு பிடித்தமான வேலை அமையும்.

மகரம்

மார்ச் மாதத்திற்குப் பிறகு மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல நேரம். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் இந்த காலகட்டத்தில் வாகனம் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இந்த ஆண்டு, சொத்து சேர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். புதிய இடம், வாகனம் வாங்கும் முயற்சி, தொழில் தொடங்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, புதிய தொழில் தொடங்கும் முயற்சி, பதவி உயர்வு, விரும்பிய இட மாற்றம் என எல்லா நல்லவிதமாக நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும்.

இதனையும் படியுங்கள் : 2025 சனி குரு ராகு கேது பெயர்ச்சிகள்

Recipes AMP · Quick view
View full