மகா சிவராத்திரியில் உருவாகும் அபூர்வ சதுர் கிரஹ யோகத்தால் ஜாக்பாட் அடிக்க போகும் ஐந்து ராசிகள்!!

இந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படும் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகாசிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படும். மகாச

By ·

இந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படும் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு இரு நாட்களுக்கு முன் வரக்கூடிய சதுர்த்தசி திதியில் சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் மகாசிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படும். மகாசிவராத்திரி என்று சூரியன், சந்திரன், சனி போன்றவை கும்ப ராசியில் இணைவதால் அபூர்வ சதுர்கிரஹ யோகம் உருவாகப் போகிறது. இதன் காரணமாக ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் நுழைவார்கள் சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக ஏற்படும். இந்த அற்புத நிகழ்வுகள் சில ராசிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களும் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுன ராசி

மகா சிவராத்திரி என்று உருவாகும் இந்த கிரக சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பார்க்கக்கூடிய இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு என பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி படிக்க திட்டம் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள். கூட்டு தொழில் மூலம் லாபத்தை பெறுவீர்கள். ஆன்மீகப் பணிகளிலும் ஆர்வம் அதிகரித்து ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி என்று உருவாகும். இந்த யோகத்தால் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். வருமானம் பெருகும் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். விரைவில் திருமணம் நடக்கும் திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கை துணையுடன் உறவுகள் சமூகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வேறு சில நிறுவனங்களில் இருந்து சிறந்த வேலை வாய்ப்பையும் நீங்கள் பெறுவீர்கள்.

சிம்ம ராசி

சிம்மராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி என்று உருவாகும். இந்த யோகத்தால் புதியதாக ஏதாவது திட்டம் முயற்சி அல்லது தொழில் தொடங்க விரும்பினால் அது நிச்சயமாக வெற்றி அடையும். சுபகாரியங்கள் நிறைவேறும் கல்வி மற்றும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் பயணம் செய்ய திட்டமிடலாம் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய காலம் இது.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். செல்வாக்கு அதிகமாக உள்ளவர்களுடன் உங்களுக்கு உறவுகள் பலமாகும். ஆயுதங்கள் அல்லது பாதுகாப்பு தொடர்பான துறையில் இருப்பவர்கள் சிறப்பான பல நல்ல பலன்களை பெற முடியும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி என்று உருவாகும் இந்த யோகத்தால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். எதிரிகள் மூலம் வந்த பிரச்சனைகள் தீர்ந்து எதிரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள். உங்களுடைய கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றி உங்களைத் தேடி வரும் வருமானம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்தால் நீங்கள் சேமிக்க முடியும் பயணங்களின் போது குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். வேலை பார்க்கக்கூடிய இடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுவது உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

இதனையும் படியுங்கள் : 2025 க்கான கஜகேசரி யோக பலன்கள்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை