சுக்கிரன் பெயர்ச்சியால் இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!!
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சுக்கிரன் கும்ப ராசியில் உள்ளார். ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 28, 2025 செவ்வாய்க் கிழமை காலை 7:12 மணிக்கு, சுக்கிரன் கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது நிதி நிலை மேம்படும். அந்த வகையில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்
இந்த மாதம் நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். திருமண வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியும் இருக்கும். வீடு, கார் போன்றவை வாங்குவதற்கான யோகங்கள் ஏற்படும். சேமிப்பு, முதலீடுகள் பெருகும். கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
மீனத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டமும் மன நிம்மதியும் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அனைத்து சுபகாரியங்களும் வீட்டில் நடைபெறும். அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வருமானங்கள் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பணம் மற்றும் முதலீடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமாக இருக்கும். திடீர் பணவரவு ஏற்படும். கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த பணப் பிரச்னைகள் நீங்கும். பண வரவு முன்பை விட அதிகரிக்கும். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்துகளை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட காலமாக நீங்கள் செய்ய நினைக்கும் எந்த காரியமாக இருந்தாலும் அதை செய்யலாம்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்த பலனைத் தரும். ஆரோக்கியம் மேம்படும். உங்கள் ஆளுமையில் ஈர்ப்பு அதிகரிக்கும். முதலீடு, சேமிப்பு செய்வது குறித்து சிந்தித்து முடிவெடுப்பீர்கள். புதிய வேலைகள், பதவிகள், பொறுப்புகள் வரும். கணவன் – மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரித்து திருமண வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்துகள் வாங்கக் கூடிய நிலை உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரவு வந்துசேரும். சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
மீனம்
மீன ராசியில் சுக்கிரன் உச்ச ஸ்தானத்தில் அமர்வதால் இந்த சுக்கிரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் நம்பிக்கையும் கவர்ச்சியும் அதிகரிக்கும். இனி வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தைக் காண்பீர்கள். புதிய வருமானங்களை உருவாக்குவீர்கள். வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பரிசுகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும்.
இதனையும் படியுங்கள் : 2025 சனிப்பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் சில ராசிகள்!