சந்திர பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!!
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பெயர்ச்சிகள் மற்றும் அதனால் உருவாகும் யோகங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சந்திரன் ஆதிக்கம் செலுத்தும் திங்கட் கிழமையான இன்று நிகழும் கிரக நிலை மாற்றங்கள் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி, பலரது வாழ்க்கையி
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பெயர்ச்சிகள் மற்றும் அதனால் உருவாகும் யோகங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சந்திரன் ஆதிக்கம் செலுத்தும் திங்கட் கிழமையான இன்று நிகழும் கிரக நிலை மாற்றங்கள் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி, பலரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஆவணி 2-ஆம் நாள் சந்திரன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குடியேறுகிறார். மிதுன ராசியில் ஏற்கனவே குடியிருக்கும் சுக்கிரன் மற்றும் குருவுடன் இணைந்து மங்களகரமான திரிகிரக யோகத்தை உண்டாக்குகிறார். இந்த மாற்றத்தால் பலன் பெறும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
இன்று உண்டாகும் திரிகிரக யோகம் ஆனது, மேஷ ராசியினரின் தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வருகிறது. உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள் கொண்டு வர விரும்பிய மாற்றங்களை நிகழ்த்தும் ஒரு தினமாக இன்று அமையும். வீட்டில் சொத்து தொடர்பான பதற்றம் இருந்தால், உறவினரின் உதவியுடன் தகராறு தீர்க்கப்படும். குழந்தைகள் தங்கள் தாயுடன் நேரத்தை செலவிடுவார்கள். மூத்த சக ஊழியர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் மனை வாங்க அதிக வாய்ப்புள்ளது. மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
மிதுனம்
மிதுன ராசியினரின் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றத்தை கொண்டு வரும் ஒரு யோகமாக இந்த திரிகிரக யோகம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு சிறப்பான ஒரு தினமாக இன்று அமையும். நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களின் நிதி பலமாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வருமானம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். திட்டமிட்டபடி செயல்பட்டால் பல்வேறு விதமான லாபங்களை நீங்கள் பெறலாம்.
கன்னி
சந்திரன் பெயர்ச்சியால் உண்டாகும் இந்த திரிகிரக யோகம், கன்னி ராசியினரின் வருமானத்தை அதிகரிக்கிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பண வரவை உறுதி செய்கிறது, நிதி நிலையை சிறப்பாக்குகிறது. சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தத்தால் நிதி ரீதியாக பயன் கிடைக்கும். முதலீடுகள் அதிக லாபத்தை பெற்று தரும். சக ஊழியர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடைக்காரர்களுக்கு சொத்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்கள் மன ரீதியாக ஆரோக்கியமாக உணர்வார்கள்.
மீனம்
மீன ராசியினர் வாழ்க்கையில் எண்ணற்ற அதிர்ஷ்டங்களை கொண்டு வரும் ஒரு யோகமாக இது பார்கப்படுகிறது. குறிப்பாக, அலுவலக பணி மேற்கொண்டு வரும் நபருக்கு சிறப்பான காலத்தை இது கொண்டு வருகிறது. உங்கள் தனித்திறமைகள் மூலம் புதிய வாய்ப்புகளை குவிக்கும் ஒரு காலமாக இது அமையும். வேலை தேடுவோருக்கு அவர்களின் தேடல் முடிவுக்கு வரும். கனவு நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிகள்