செவ்வாய் வக்ர நிவர்த்தி இனி இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!

ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மா

By ·

ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கோபத்தில் நாயக்கனாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் வக்ர நிவர்த்தியினால் சில ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் அதிகாரிகளின் அழுத்தத்தை சந்திக்க நேரிடும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மையுடன், கடுமையான நோய்களும் உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம். அதனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

செவ்வாய் வக்ர நிவர்த்தியினால் குடும்பம், சேமிப்பு மற்றும் பேச்சுத்திறன பாதிக்கும். எனவே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பேச்சைக் கட்டுப்படுத்தி கண்ணியமாகப் பேச வேண்டும். இல்லையெனில் வீட்டில் பிரச்சனைகள் வரலாம். ஏதாவது புதிய விஷயங்களைச் செய்யத் தொடங்கினாலும், நெருக்கடிகள் ஏற்படலாம். கல்வித் துறையில் இருப்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர் கவனமாக செயல்படவும். சிலருக்கு மன அமைதியற்ற சூழல் இருக்கும். எந்த செயலிலும் பொறுமையுடன் செயல்படுவது அவசியம்.

கடகம்

கடகம் செவ்வாய் கிரகத்தின் வக்ர நிவர்த்தியினால், தொழில் வாழ்க்கையில் திடீர் மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படலாம். தைரியம், வலிமை மற்றும் உறுதியை இழக்கலாம். குறுகிய பயணங்கள், மருத்துவ கட்டணம் அல்லது சட்ட விஷயங்களால் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். முக்கியமாக வேலையில் ஏற்படும் பிரச்சினைகளால் பொருளாதாரரீதியாக சிரமப்பட வாய்ப்புள்ளது.

துலாம்

செவ்வாய் கிரகத்தின் வக்ர நிவர்த்தியினால், செலவுகள், குறிப்பாக பயணம் மற்றும் உடல்நலம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கலாம். வீட்டில் சற்று மன உளைச்சல் ஏற்படலாம். உங்கள் உரையாடலில் ஆக்ரோஷம் கூடும், எனவே நிதானத்துடன் பேசுங்கள். நிதி நிலைமையில் பெரிய தாக்கம் ஏற்படலாம். பிரச்சினைகளை தவிர்க்க வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும், மேலும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கையில் குழப்பமான சூழல் சமாளிக்க வேண்டியது இருக்கும்.

விருச்சிகம்

செவ்வாய் கிரகத்தின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு சாதகமாக இருக்காது. உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிப்பார்கள். குடும்ப உறவுகளில் எழும் பிரச்சனைகளை தீர்க்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்ப பிரச்சனைகளின் போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் உங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும், பேச்சில் கவனமாக இருப்பதும் அவசியம்.

தனுசு

செவ்வாய் கிரகத்தின் வக்ர நிவர்த்தி சில சவால்களைத் தரக்கூடும். மனதில் பதற்றத்தை உருவாக்கலாம். உங்கள் வாழ்க்கையில், உங்கள் வேலையைப் பற்றி நீங்கள் சில பாதுகாப்பின்மையை உணரலாம். காதல் உறவுககளில் இருப்பவர்கள் தவறான புரிதல்களால் பிரிவதற்கு வாய்ப்புள்ளது. நிதிரீதியாக அவர்கள் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். இந்த காலத்தில் உங்களின் உணர்ச்சிகளை, கோபப்படுதலைக் கட்டுப்படுத்துவது நல்லது.

இதனையும் படியுங்கள் : பெயர்ச்சியாகும் செவ்வாய் பகவானால் இனி இந்த ராசிகள் பிரச்சனைகளை எதிர்கொள்ள போகிறார்கள்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை