சூரிய பகவானின் தாக்கத்தால் மார்கழி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!
சூரிய பகவான் மார்கழி மாதத்தில் தனுசு ராசியில் சஞ்சரிக்க போவதால் ஒரு சிலர் ராசிகளுக்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலை உருவாகும். ஒரு சில ராசிகள் தொழிலில் பிரச்சனை நஷ்டம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார
சூரிய பகவான் மார்கழி மாதத்தில் தனுசு ராசியில் சஞ்சரிக்க போவதால் ஒரு சிலர் ராசிகளுக்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலை உருவாகும். ஒரு சில ராசிகள் தொழிலில் பிரச்சனை நஷ்டம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும் கவனமாக இருக்க வேண்டிய அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதத்தில் நல்ல பலன்களும் அசுப பலன்கள் சேர்ந்து கிடைக்கும். முக்கியமாக உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்துவது நல்லது. அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே வேலையை ஒழுங்குப்படுத்தி சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சினைகளை தலையிடுவதை குறைக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளை நிதானமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். வண்டி வாகன தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதத்தில் வேலை மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் பொறுப்புகளை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்கு உடல் நலம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படும் அதனால் செலவுகள் ஏற்படலாம் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும் உத்தியோகத்தில் கடின உழைப்பு இருந்தால் வெற்றி கிடைக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதத்தில் நல்ல பலன்களும் கிடைக்கும் பணிகளை விரைந்து முடிப்பதில் சில சிரமங்கள் ஏற்படலாம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பொருளாதார ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு முன்பாக நீங்கள் கொடுத்த திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக இருந்தாலும் பணிச்சுமை அதிகமாகவே இருக்கும் இதனால் உங்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் சுமாரான பலன்கள் இருக்கும். அதிக அளவில் செலவ ஏற்படும். நிதிநிலை நெருக்கடியை தரும். வேலை தேடுபவர்களுக்கு மார்கழி மாதம் நல்ல சாதகமான காலமாக அமையும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்து அதற்கான அலைச்சல்களும் ஏற்படும். உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
மீன ராசி
மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு மார்கழி மாதத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு வேலையை முடிப்பதில் சிரமம் ஏற்படும். வீடு வாகனம் தொடர்பான புதிய ஒப்பந்தங்களில் கவனம் அதிகமாக தேவை. உடல்நிலை பாதிப்புகள் சில பயணங்களால் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
இதனையும் படியுங்கள் : 2025 சனிப் பெயர்ச்சியால் நல்ல காலம் கிட்ட போகும் சில ராசிகள்!