செவ்வாய் வக்ர பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

செவ்வாய் பகவான் வேகத்தையும் ஆற்றலையும் கொடுக்கக் கூடியவர். டிசம்பர் 7ஆம் தேதி முதல் கடக ராசியில் வக்கிர பெயர்ச்சியை மேற்கொள்ள போகிறார் எனவே பல ராசியை சேர்ந்தவர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். டிசம்பர் 7ஆம் தேதி முதல் செவ்வாய் பகவான் கடக ராசியில் வக்கிரப்பெயர்ச்சியை மேற்கொள்ள போகி

By ·

செவ்வாய் பகவான் வேகத்தையும் ஆற்றலையும் கொடுக்கக் கூடியவர். டிசம்பர் 7ஆம் தேதி முதல் கடக ராசியில் வக்கிர பெயர்ச்சியை மேற்கொள்ள போகிறார் எனவே பல ராசியை சேர்ந்தவர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். டிசம்பர் 7ஆம் தேதி முதல் செவ்வாய் பகவான் கடக ராசியில் வக்கிரப்பெயர்ச்சியை மேற்கொள்ள போகிறார். இதனால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளைப் பற்றி பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் வக்கிரப் பெயர்ச்சியை மேற்கொள்வதால் சாதகமற்ற சூழல் அமையலாம் வெளி பார்க்கக்கூடிய இடத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்கள் ஏற்படும் எனவே பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. தொழில் சார்ந்த விஷயத்தில் முடிவுகளை எடுக்கும்போது கவனமாக எடுக்க வேண்டும். பணப்பரிவர்த்தனைகளின் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரிய ஸ்தானத்தில் செவ்வாயின் வக்ர பயிற்சி நடப்பதால் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்காது. வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. வேலை பார்க்கக் கூடிய இடத்தில் அழுத்தம் அதிகரிக்கலாம். புதிய பொறுப்புகள் வழங்கப்படும் வாய்ப்புள்ளது உங்கள் வேலையில் தடைகளும் ஏற்படும்.

தனுசு ராசி

தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சியால் பல சிரமங்கள் ஏற்படும். பொருளாதார நிலையில் எச்சரிக்கை தேவை இல்லையெனில் இழப்புகளை சந்திக்க நேரிடும். நண்பர்களையும் உறவினர்களையும் அனுசரித்து செல்ல வேண்டும் ஏனெனில் கருத்து வேறுபாடு கூட ஏற்படலாம். உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள் சில கடினமான சூழ்நிலைகளும் ஏற்படும்.

மீன ராசி

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு வேலி மற்றும் தொழிலில் நிதி இழப்புகள் ஏற்படலாம் தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. அரசு தொடர்பான வேலைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும் ஒரு சிலருக்கு வேலை தொடர்பாக ஏற்படக்கூடிய இடமாற்றம் பலவிதமான சிரமங்களை கொடுக்கும். நீதிமன்ற தொடர்பான வழக்குகள் உங்களுடைய மன நிம்மதியை கெடுக்கலாம்.பலவிதமான வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

இதனையும் படியுங்கள் : 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சனி மற்றும் குரு பகவானின் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்!!

Recipes AMP · Quick view
View full