நவம்பர் மாதத்தில் வக்ரமாகும் குரு மற்றும் புதனால் கவனமாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

ஜோதிடத்தின்படி நவகிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் அடைகின்றனர். அதோடு வக்ர பெயர்ச்சி அடைவது வக்ர நிவர்த்தி அடைவது போன்ற மாற்றங்களும் ஏற்படும். தற்போது குருபகவான் ரிஷப ராசியில் வக்ர நிலைகள் பயணித்து வரும் சூழலில் 26ம் தேதி விருச்சிக ராசியில் வக்ர பெய

By ·

ஜோதிடத்தின்படி நவகிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் அடைகின்றனர். அதோடு வக்ர பெயர்ச்சி அடைவது வக்ர நிவர்த்தி அடைவது போன்ற மாற்றங்களும் ஏற்படும். தற்போது குருபகவான் ரிஷப ராசியில் வக்ர நிலைகள் பயணித்து வரும் சூழலில் 26ம் தேதி விருச்சிக ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப்போகிறார். அதனால் இந்த மாதத்தின் கடைசியில் மூன்று ராசியினர் அவர்களுடைய வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி

நவம்பர் மாதத்தின் இறுதியில் குரு பகவானும் புதன் பகவானும் வக்ர நிலையில் இருப்பதால் பல சவால்களை சந்திக்க நேரிடும். மேஷ ராசியினர் மீதான நம்பிக்கை வேலை பார்க்கக் கூடிய இடத்தில் குறைய தொடங்கும். வேலை பளு காரணமாக மன அழுத்தமும் ஏற்படும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம் முதலீடுகளை பார்த்து செய்ய வேண்டும். பொருளாதார ரீதியாக சில பிரச்சினைகளும் ஏற்படும் பண பிரச்சனையால் சிரமங்கள் ஏற்படலாம்.

கடக ராசி

நவம்பர் மாத இறுதியில் குரு பகவானும் புதன் பகவான் வக்ர நிலையில் பயணிப்பதால் கடக ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் கவனக்குறைவோடு எந்த ஒரு விஷயத்தையும் செய்யக்கூடாது இல்லையெனில் பெரிய இழப்பு நேரிடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சினைகள் அதிகமாக வரலாம் எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் அலைச்சலை சந்திக்க நேரிடலாம் எனவே எது நடந்தாலும் பொறுமையாக கையாள வேண்டும்.

துலாம் ராசி

குரு பகவானும் புதன் பகவானும் வக்கிரமான நிலையில் உள்ளதால் துலாம் ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் எதிர்பார்க்காத பல பிரச்சனைகள் நேரிடும். நிதிநிலைமை மோசமாக இருக்கும். கடும் வாங்காமல் இருப்பது நல்லது இல்லை எனது கடன் பிரச்சனைகளில் சிக்கி விடுவீர்கள். வியாபாரிகள் தொழில் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். திருமண மற்றும் காதல் வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் ஏற்படும். வீட்டு சூழல் கொஞ்சம் மன அழுத்தத்தை கொடுக்கும் புத்திசாலித்தனமாக குடும்ப உறுப்பினர்களை கையாண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கார்த்திகை மாதத்திற்கான ராசி பலன்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

Recipes AMP · Quick view
View full