சனிப்பெயர்ச்சியால் 2025 இல் பொற்காலத்தை பெறப்போகும் ராசிகள்!
2025 ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பான ஆண்டாக கருதப்படுகிறது இந்த ஆண்டு சில முக்கியமான கிரகங்கள் ராசி மாற்றம் அடையப்போவதால் இது ஜோதிடத்தில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. குரு பெயர்ச்சியும் இந்த ஆண்டு நடக்கப் போவதால் மிகவும் விசேஷமான ஆண்டு இது. முக்கியமான கிரகமாக இருக்கக்கூடிய
2025 ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பான ஆண்டாக கருதப்படுகிறது இந்த ஆண்டு சில முக்கியமான கிரகங்கள் ராசி மாற்றம் அடையப்போவதால் இது ஜோதிடத்தில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. குரு பெயர்ச்சியும் இந்த ஆண்டு நடக்கப் போவதால் மிகவும் விசேஷமான ஆண்டு இது. முக்கியமான கிரகமாக இருக்கக்கூடிய சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார் புத்தாண்டில் மார்ச் மாதத்தில் அவர் மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். இது ஜோதிட ரீதியாக மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. மார்ச் மாதத்தில் நடக்க போகும் இந்த சனிப்பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் ஆனால் ஒரு சில ராசிகள் அவர்களுடைய வாழ்க்கையில் பல விதமான அதிர்ஷ்டத்தையும் பொற்காலத்தையும் வெற்றியையும் பெறப்போகிறார்கள் அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் பல சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் குருபகவானின் அருளும் ரிஷப ராசிக்காரர்கள் மீது பொழியும். வியாபாரத்தில் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த அனைத்து பணிகளும் நிறைவேறும். வாழ்க்கை துணியின் அன்பை அதிகப்படியாக பெறுவீர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். வசதிகள் அதிகரிக்கும் வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும் ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியின் தாக்கத்தால் சாதகமான பலன்கள் ஏற்படும் மேலும் மிதுன ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் தொழில் முன்னேற்றமும் ஏற்படும். நிதிநிலைமை வலுப்பெறும் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். திடீரென நிதி ஆதாயம் ஏற்படும் குடும்பம் மற்றும் உறவுகளில் மகிழ்ச்சி பொங்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும் வாழ்க்கையில் செல்வ செழிப்புகளும் ஏற்படும் நல்ல காலம் இது வருமானம் அதிகரிப்பதோடு திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் ராசி மாற்றத்தால் எதிரிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும் பொருளாதார ரீதியாக நல்ல பலன் கிடைக்கும். அலுவலக விஷயங்களில் வெற்றி கிடைக்கும் மன உளைச்சல் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வியாபாரம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும் அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் தொழிலில் விரும்பிய பலன் கிடைக்கும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் மகர ராசிக்காரர்கள் அனைத்து விதமான இன்பங்களையும் அனுபவிப்பார்கள். மகர ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் வாழ்க்கையின் சாதகமான பல மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கை அதிகரிக்கும் புதிய தொழில் தொடங்க நல்ல நேரம் ஆக அமையும் முதலீடுகள் செய்தால் அது லாபத்தை மட்டுமே கொடுக்கும் பொருளாதார நிதிநிலை வலுவாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெற்று முன்னேறுவீர்கள்.
இதனையும் படியுங்கள் : சூரியனின் பெயர்ச்சியால் நன்மைகள் பெறப் போகும் சில ராசிக்காரர்கள்!