சுக்கிரன் மற்றும் சூரியன் சேர்க்கையால் ஒரு வருடத்திற்கு பின்பு செல்வத்தை பெறப்போகும் ராசிகள்!!

ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சிகளும் கிரக சேர்க்கையும் மனிதனுடைய வாழ்க்கையில் நல்ல விளைவுகளையும் தீய விளைவுகளையும் ஏற்படுத்தும். அந்த வகையில் தற்பொழுது மீன ராசியில் உள்ள சுக்கிரன் அங்கு உச்ச பலனை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மார்ச் மாதத்தில் அங்கு சூரியன் பெயர்ச்சியாக போவதால் இந்த சே

By ·

ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சிகளும் கிரக சேர்க்கையும் மனிதனுடைய வாழ்க்கையில் நல்ல விளைவுகளையும் தீய விளைவுகளையும் ஏற்படுத்தும். அந்த வகையில் தற்பொழுது மீன ராசியில் உள்ள சுக்கிரன் அங்கு உச்ச பலனை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மார்ச் மாதத்தில் அங்கு சூரியன் பெயர்ச்சியாக போவதால் இந்த சேர்க்கை நடக்கும் போது சில ராசிக்காரர்களுக்கு பொற்காலம் அமையப்போகிறது. இதனால் செல்வம் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கப் போகிறது. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுன ராசி

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு சுக்கிர பகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை தொழிலில் வியாபாரத்தில் வேலையில் முன்னேற்றத்தை கொடுக்கும். எதிர்பார்த்த லாபமும் சந்தையில் உங்களுடைய மதிப்பும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். பணியிடத்தில் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெற்று அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பயணங்கள் லாபத்தை தரக்கூடியதாக அமையும். தொழிலை விரிவுபடுத்தலாம். செல்வமும் உங்களுக்கு அதிகரிக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்கு சூரியன் சுக்கிரன் சேர்க்கை மீன ராசியில் உருவாக போவதால் பலவிதத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். தனஸ்தானத்தில் ஏற்படும் கிரக சேர்க்க யோகத்தால் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயம் ஏற்படும். வருமான ஆதாரங்கள் பல வகைகளில் இருந்து கிடைக்கும். நிதிநிலை மேம்படுவதால் கடன் தொல்லை தீரும். பிறரிடம் சிக்கி உள்ள பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் உடல் மற்றும் மனதளவில் வலிமையாக உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்பின் முழு பலனை பெறுவீர்கள். போட்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மீன ராசி

மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியன் சேர்க்கை நடக்கப்போவதால் ஏழரை சனி நடந்தாலும் கிரக சேர்க்கை காரணமாக திட்டமிட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவடையும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பு தொடர்பான முன்னேற்றத்தை அடைவார்கள். வேலை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக வேலைகள் தொழிலில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும். வேலை பார்க்கக்கூடிய இடத்தில் குடும்பத்தில் சமூகத்தில் மரியாதை மதிப்பு அதிகரிக்கும். உங்களுடைய வேலை அனைவராலும் பாராட்டப்படும். நீண்ட நாட்களாக திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டிருந்தால் நல்லவரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்கும்.

இதனையும் படியுங்கள் : 2025ம் ஆண்டு குரு பெயர்ச்சி

Recipes AMP · Quick view
View full