ராகு கும்பத்தில் நுழைவதால் 2025 இல் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

ஜோதிட ரீதியாக சர்ப கிரகங்களாக கருதப்படக்கூடிய ராகு மற்றும் கேது கிரகங்கள் அசுப பலன்களை தரக்கூடியது. சில சமயங்களில் வசதி வாய்ப்புகளை கொடுத்தாலும் அதன் பிறகு செலவுகள் அதிகரிக்க தான் செய்யும். தற்போது சனி பகவானின் வீடான கும்ப ராசியில் ராகு அமர போகிறார் இதனால் நிழல் கிரகமான கேதுபகவான

By ·

ஜோதிட ரீதியாக சர்ப கிரகங்களாக கருதப்படக்கூடிய ராகு மற்றும் கேது கிரகங்கள் அசுப பலன்களை தரக்கூடியது. சில சமயங்களில் வசதி வாய்ப்புகளை கொடுத்தாலும் அதன் பிறகு செலவுகள் அதிகரிக்க தான் செய்யும். தற்போது சனி பகவானின் வீடான கும்ப ராசியில் ராகு அமர போகிறார் இதனால் நிழல் கிரகமான கேதுபகவான் சிம்மத்தில் சஞ்சரிக்க போகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு கடினமான சூழ்நிலைகள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்.

சிம்ம ராசி

சிம்மராசிக்காரர்களுக்கு ராகு கும்பத்தில் சஞ்சரிக்க போவதால் சாதகமற்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது மேலும் அஷ்டம சனி தொடங்க உள்ள நிலையில் கேது செஞ்சாரமோ ராகு சஞ்சாரமும் சேர்ந்து நடப்பதால் பண பற்றாக்குறை அதிகமாக இருக்கும் எனவே அதிகமாக மற்றவர்களிடத்தில் பேசுவதை குறைக்க வேண்டும் கடுமையான வார்த்தைகள் பாதிப்பை ஏற்படுத்தும் மனதையும் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும் வீண் செலவுகளையும் கட்டுப்படுத்தி மிகவும் கவனமாக செலவு செய்ய வேண்டும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு ராகுவின் அமைப்பானது பல சங்கடங்களை தரக்கூடியதாக இருக்கும் இதனால் மனக்கவலை வருத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழில் தொடங்க நினைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கத்தால் சிக்கல்கள் ஏற்படலாம் பிள்ளைகளால் சில பிரச்சனைகளும் ஏற்படும் பொருளாதார ரீதியாக இழப்புகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி

ராகுவின் சஞ்சாரத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வேலைகளை முடிப்பதில் சிறப்புகள் ஏற்படும் மேலும் பல போராட்டங்களும் ஏற்படும். ஆமா மேலும் மன ரீதியான சில பிரச்சனைகளும் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு பேச்சு கருத்து போன்றவற்றில் கவனம் தேவை. அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையோடு சில வாக்குவாதங்கள் ஏற்படலாம் எனவே குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்துப் போக வேண்டும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில மன அழுத்தத்தை கொடுக்கும் ஆரோக்கியத்தில் கவனம் அதிகமாக வேண்டும். செலவுகள் அதிகரிக்கும் பண பரிவர்த்தனை விவகாரங்களில் கவனம் அதிகமாக தேவை உடல்நல பிரச்சனை அதிகரிக்கும் மனக்கவலையும் அதிகரிக்கும். தொழில் தொடர்பான சில பிரச்சினைகளும் ஏற்படலாம் துணையுடன் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்.

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு ராகுவின் அமைப்பால் ஓரளவு சாதகமான சில பலன்களை ஏற்பட்டாலும் தூக்கம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. மனதில் ஏதேனும் கவலை இருந்தால் அது அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவீர்கள். மேலும் இந்த நேரத்தில் ஆன்மீக யாத்திரை செய்ய வாய்ப்புள்ளது மங்களகரமான நிகழ்வுகளும் நடக்கும் காதல் விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். படிப்பிலும் கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும்.

இதனையும் படியுங்கள் : புதனின் பெயர்ச்சியால் புத்தாண்டு தொடக்கத்திலேயே இந்த 3 ராசிகளுக்கு பம்பர் பலன்கள் தான்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை