வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய ஒரு ஆன்மீக சமையல்!!

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த நாள். இந்த நாள் அன்று ஆன்மீக ரீதியாக பக்திபூர்வமாக நாம் சமைத்து உண்ணும் உணவுகள் மனதிற்கு ஆன்மீக சக்தியையும் மனதிற்கு அமைதியையும் கொடுக்கும் என்பது பலருடைய நம்பிக்கை. வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய சமையல் அறையில் ஆன்மீகம் நிறைந்த ச

By Prem Kumar · 17/7/2025

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த நாள். இந்த நாள் அன்று ஆன்மீக ரீதியாக பக்திபூர்வமாக நாம் சமைத்து உண்ணும் உணவுகள் மனதிற்கு ஆன்மீக சக்தியையும் மனதிற்கு அமைதியையும் கொடுக்கும் என்பது பலருடைய நம்பிக்கை. வெள்ளிக்கிழமை அன்று உங்களுடைய சமையல் அறையில் ஆன்மீகம் நிறைந்த சமையலை சமைப்பது மிகவும் சிறந்தது.

மகாலட்சுமி தேவியாருக்கு பிடித்த இனிப்புகள்

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தேவியாருக்கு உகந்த நாள் என்பதால் அன்று அவருக்கு பிடித்த இனிப்புகள் செய்வது நல்லது. அந்த வகையில் பால், அரிசி, சேமியா, பருப்பு என பலவகை பாயாசங்களை செய்யலாம். இதில் ஏலக்காய்க்கு குங்கும பூ சேர்த்து சமைக்கும் போது அதனுடைய வாசனை வீடு முழுவதும் பரவி தெய்வீக உணர்வை ஏற்படுத்தும். மகாலட்சுமி தேவியாருக்கு இனிப்பான பாயாசத்தை படைத்து வழிபாடு செய்வதால் அவருடைய அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். வெல்லம், அரிசி, நெய் சேர்த்து செய்யப்படும் சர்க்கரை பொங்கல் வெள்ளிக்கிழமை வழிபாடுகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனுடைய இனிப்பும் நெய்யின் மணமும் மனதை அமைதிப்படுத்தும். மகாலட்சுமி தேவியாருக்கு சர்க்கரைப் பொங்கலை படைத்து பூஜை செய்து வழிபாடு செய்வதால் நாம் மனதார வேண்டும் வேண்டுதல்கள் அனைத்தும் பலிக்கும்.

சைவ உணவுகள்

ரவை, சர்க்கரை, நெய் அனைத்தும் சேர்த்து செய்யப்படும் கேசரி எளிமையாகவும் சுவையாகவும் இருக்கும். இதில் முந்திரி திராட்சை சேர்த்து சமைப்பது மிகவும் சுவையாக இருக்கும். இதனை வைத்து வழிபாடு செய்தால் மகாலட்சுமி தேவியாரின் அருளை பெறலாம். சைவ உணவுகளையும் மட்டுமே வெள்ளிக்கிழமை அன்று சமைத்து சாப்பிடுவது உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தும். காய்கறிகள் அதிகம் நிறைந்த வெஜிடபிள் பிரியாணி புலாவ் போன்றவற்றை சமைப்பதும் நல்லது. வெள்ளிக்கிழமை அன்று பருப்பு குழம்பு மோர் குழம்பு செய்வது நல்லது. துவரம் பருப்பு சேர்த்து நாம் வெள்ளிக்கிழமை அன்று சமையல் செய்வதன் மூலம் மகாலட்சுமி தேவியாரின் அருளை முழுமையாக பெறலாம். பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம். நீங்கள் சமைக்கும் உணவுகளை மகாலட்சுமி தேவியாருக்கு முன்பாக நெய்வேதியம் ஆக படைத்து வழிபாடு செய்வது மிக மிக சிறப்பானது. இது உங்களுக்கு தெய்வீக சக்தியை அதிகப்படுத்தும். மேலும் அன்றைய நாளில் சாதத்தை குறைவாகவும் காய்கறிகளை அதிகமாகவும் வைத்து சாப்பிடுவது உடலையும் மனதையும் தூய்மையாக்கும்.

இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய மருதாணி இலைகளைக் கொண்டு இந்த ஒன்றை மட்டும் பண்ணுங்க!

Recipes AMP · Quick view
View full