உங்கள் கடன் பிரச்சனை தீர வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய கோவில்

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெர

By Prem Kumar · 4/6/2024

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெரியோர்களின் கட்டளை. பசியோடு கூட உறங்கலாம், கடனோடு உறங்காதே என்பது ஆன்மிகம் காட்டும் அறிவுரை. பொதுவாக நம் வீட்டில் எவ்வளவு தான் பணம் தந்தாலும் அதற்கு செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன், வியாதி போன்ற கர்மவினைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும். அதிலிருந்து தப்பிக்க நம் முன்னோர்கள் ஒரு கோவிலை பற்றி நமக்கு கூறியுள்ளனர். அங்கு போய் வந்தால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனை, பணப் பிரச்சனையும் தீரும் என்பது நம்பிக்கை. அது என்ன கோவில் என்பதைப் பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

திருப்பதி ஏழுமலையான்

திருமலை திருப்பதி இந்த க்ஷேத்திரத்துக்கு இணையான வேறு க்ஷேத்திரம் இல்லை; திருமலை திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை. காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. இந்த சேஷத்திரத்தில் மகாவிஷ்ணு நடத்திக் காட்டிய மகிமைகள் பல. ஒருநாள் இருநாளில் அல்ல. பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு நடத்திய ‘நாடகம்’ தான் திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் குடிக்கொள்ள காரணமாயிற்று.

திருப்பம் தரும் திருப்பதி

திருப்பதி சென்றால் திருப்பம் வரும். திருமலைக்கு மலை ஏறி செல்வோருக்கு வாழ்வில் ஏற்றம் வரும் என்பார்கள். நாம் உள்ளத்தூய்மையுடன், நம் கோரிக்கைகளை திருப்பதி ஏழுமலையானிடம் வைத்தால் கட்டாயம் அதை நிறைவேற்றி வைப்பார். அதனால் தான் வேறெங்கும் இல்லாத பக்தர்கள் கூட்டம், திருப்பதியில் நிரம்பி வழிகிறது. மாதம்தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தன்று திருப்பதியில் பெருமாளை தரிசனம் செய்து வந்தால் கடன் தீருமாம். அப்படி வாழ்க்கையில் பண கஷ்டம், கடன் தொல்லை என்று வருபவர்களின் குறைகளை தீர்க்க திருப்பதியிலேயே ஒரு கோயில் அமைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

கடன் வாங்கிய பெருமாள்

திருமலையில் கோடி கோடியாக வருமானம் வந்த போதிலும், தனது திருமணத்திற்காக குபேரனிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஏழுமலையான் இருந்து வருவதாக புராண கதைகள் பலருவும் சொல்கின்றன.‌ திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள சீனிவாசப் பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராண கதைகள் சொல்கின்றன. அந்த கடனை திரும்ப அடைப்பதற்காக தற்போது வரை குபேரனுக்கு வட்டியை மட்டுமே கட்டிக் கொண்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதுகுறித்து யோசித்து தூங்கி கொண்டிருந்தபோது கனவில் சில்பூர் பகுதி தோன்றியதாகவும், உடனே இந்த மேட்டின் மீது காலடி எடுத்து வைத்து மலை மீதுள்ள குகைக்குள் சென்று தவம் புரிந்ததாகவும் வரலாறு சொல்கிறது. இதனையடுத்து குபேரர்கள் சுவாமியிடம் மன்னிப்பு கேட்டு சென்றுள்ளனர். கடன் என்பது எவ்வளவு பெரிய வலி மிகுந்தது, அவமானம் நிறைந்தது என்பவை குபேரனிடம் கட வாங்கி வட்டி கட்டிக்கொண்டிருக்கும் வேங்கடவன் நன்றாகவே அறிந்திருக்கிறார் என்றும் அதனால்தான் தன்னுடைய பக்தர்கள், கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்தால், கடன் தொல்லையில் கலங்கிக் கண்ணீர் விட்டால், அவற்றை ஏழுமலையான் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டாராம்.

கடன் தீர்க்கும் சில்பூர் வெங்கடேஸ்வரா கோவில்

திருப்பதி சில்பூர் மண்டலத்தில் அமைந்துள்ள புகுலு வெங்கடேஸ்வரா கோயில் தான் இந்த கோயில். பல வருட வரலாறை கொண்ட இந்த கோயிலுக்கு சென்றால் பணப்பிரச்சனை, கடன் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம், கடனால் தவிக்கும் பக்தர்கள் மனதார நினைத்து இந்த கோயிலுக்கு சென்று வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது. அதனால் கடனால் தவிக்கும் பக்தர்கள் மனதார நினைத்து இந்த கோயிலுக்கு சென்று வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : உங்களால் திருப்பதிக்கு போக முடியவில்லையா? தடைப்படுகிறதா ?அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!

Recipes AMP · Quick view
View full