Home ஆன்மிகம் உங்களால் திருப்பதிக்கு போக முடியவில்லையா? தடைப்படுகிறதா ?அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!

உங்களால் திருப்பதிக்கு போக முடியவில்லையா? தடைப்படுகிறதா ?அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!

இந்தியாவில் இருக்கக்கூடிய கோவில்கள்ல திருப்பதி திருமலை வெங்கடேச சிலபதி கோவில் மிகவும் தெய்வீக தன்மை மற்றும் புண்ணிய தன்மை வாய்ந்த கோவிலாக தான் போற்றப்படுது. திருப்பதி சென்று திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தாலேவாழ்வில் மாபெரும் திருப்பம் உண்டாகும் என்பது ஐதீகம். அதனால் தான் அரசியல்வாதிகளும், விஐபிக்களும், ஏழை, நடுத்தர மக்களும், பணக்காரர்களும் ஏழுமலையானை மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ஏழுமலை ஏழு நிலை வாசல் மனித உடலில் இருக்கின்ற ஏழு சூட்சும சக்கரங்களை குறிக்கிறது.

-விளம்பரம்-

திருப்பதி செல்ல தடை ஏற்படுகிறதா?

ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்த காலத்தில் திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்றால் அது ஒரு பெரிய விஷயமாக பேசப்பட்ட வருகிறது. ஆனால் பெருமாளை தரிசனம் செய்யறது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. நாம் நினைத்தால் நம் வீட்டின் அருகில் இருக்கும் கோவில்களுக்கு செல்லலாம். ஆனால், பெருமாளே நினைத்தால் மட்டும் தான் நாம் அவரை தரிசனம் செய்ய முடியும் என்று பெரியோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். நிறைய பேருக்கு திருப்பதி செல்வதற்கு நேரம் காலம் கைகூடி வராது. எப்போ திருப்பதிக்கு யாத்திரை போக வேண்டும் என்று நினைத்தாலும் தடைகள் நேரும். எந்த தடையும் இல்லாமல் பெருமாளை எப்படி தரிசனம் செய்வது என்று பார்க்கலாம்.

திருப்பதி செல்ல பரிகாரம்

திருப்பதி செல்ல வேண்டும் என‌ நினைப்பவர்கள் ஒரு மண் உண்டியல் வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து ஏழுமலையானே உன்னை சீக்கிரம் வந்து தரிசிப்பதற்கு எனக்கு அருள் செய்‌ என மணதார வேண்டி தினமும் காலையில் ஒரு ரூபாய் நாணயத்தை அதில் போட்டு வாருங்கள்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் அவர்களுக்கு விரைவிலேயே திருப்பதிக்கு செல்வதற்கான வாய்ப்பு அமையும். குலதெய்வ சாபம் இருப்பவர்களாலும் திருப்பதிக்கு செல்ல முடியாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. குலதெய்வ சாபம் நீங்கி திருப்பதி செல்ல வேண்டுமானால் முதலில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு செல்ல வேண்டும். முடியாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து பூஜை செய்து விட்டு, செல்லலாம்.

இப்படி குலதெய்வத்தை ‌வணங்கிவிட்டு திருப்பதி செல்லும் போது எவ்விதமான தடைகள், தடங்கல்கள் இருந்தாலும், துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்டாலும் அது மலை போல் வந்து பனிபோல் நீங்கி விடும். அப்படி செல்லும் போது மறக்காமல் அந்த உண்டியலை எடுத்துச் சென்று திருப்பதி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடுங்கள். திருப்பதி சென்று திரும்பியதும், மீண்டும் வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்திற்கு நன்றி கூறிவிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் திருப்பதி செல்லும் பாக்கியத்துடன், திருப்பதி சென்று வந்த முழு பலனையும் பெற முடியும்.

-விளம்பரம்-

திருப்பதி செல்ல உகந்த நாள்

சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமையன்று திருப்பதி திருமலை வெங்கடாசலபதி வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக தான் கருதப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வருகின்ற முதல் திங்கட்கிழமை அன்று திருப்பதி திருமலைக்கு சென்று வெங்கடாஜலபதியைமதியம் 12 மணிக்குள் தரிசனம் செய்து வழிபட்டால் மிகச் சிறப்பான வாழ்க்கையை வாழலாம்.

இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் அதிர்ஷடம் வர போவதை முன்னக்கூடியே உணர்த்தும் கனவுகள் ? என்னெ்ன கனவுகள் தெரியுமா ?