இந்த வெயில் காலத்துல இந்த ஹெல்தியான ஏபிசி வடகம் போட்டு வெச்சுக்கோங்க ஒரு வருஷத்துக்கு கெட்டுப் போகாது!!

ஏ பி சி ஜூஸ் கேள்விப்பட்டு இருப்பீங்க அது என்ன ஏ பி சி வடகம் அப்படின்னு யோசிக்கிறீங்களா? ஏ பி சி ஜூஸ் போடும் போது ஒரு சிலர் நெல்லிக்காய் சேர்ப்பாங்க ஒரு சிலர் ஆப்பிள் சேர்ப்பாங்க ரெண்டுமே ஆரோக்கியமானது. அந்த வகையில இந்த ஏ பி சி வடகமும் அதே மாதிரி செய்றதுதான் பீட்ரூட் கேரட் சேர்த்

By Prem Kumar · 11/4/2025

ஏ பி சி ஜூஸ் கேள்விப்பட்டு இருப்பீங்க அது என்ன ஏ பி சி வடகம் அப்படின்னு யோசிக்கிறீங்களா? ஏ பி சி ஜூஸ் போடும் போது ஒரு சிலர் நெல்லிக்காய் சேர்ப்பாங்க ஒரு சிலர் ஆப்பிள் சேர்ப்பாங்க ரெண்டுமே ஆரோக்கியமானது. அந்த வகையில இந்த ஏ பி சி வடகமும் அதே மாதிரி செய்றதுதான் பீட்ரூட் கேரட் சேர்த்துக்கிட்டு ஆப்பிளுக்கு பதிலா நெல்லிக்காய் சேர்த்து அரைத்து அதனை அவலுடன் சேர்த்து கலந்து சூப்பரான ஏபிசி வடகம் செய்ய போறோம். இந்த வெயில் காலத்துல பொதுவாய் எல்லாருமே மாங்காய் வடகம் மோர் மிளகாய் அரிசி வடகம், ஜவ்வரிசி வடகம் எல்லாமே போட்டு ஒரு வருஷத்துக்கு ஸ்டோர் பண்ணி வச்சுப்பாங்க.

அதே மாதிரி தான் இன்னைக்கும் நம்ம இந்த சூப்பரான வடகம் செஞ்சு ஒரு வருஷத்துக்கு ஸ்டோர் பண்ணி வைக்கப் போறோம். எப்பவுமே ஒரே மாதிரியா வடகம் செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா இந்த வருஷம் வடகம் போட்டு வச்சுக்கோங்க. சாம்பார் சாதம் ரசம் சாதம், பருப்பு சாதம், காரக்குழம்பு எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான சைடு டிஷ் ஆக இருக்கும். இந்த டேஸ்டான வடகம் ஒருதடவை செஞ்சுட்டீங்கன்னா அடுத்த வருஷம் இந்த வெயில் காலத்துல கண்டிப்பா இந்த வடகத்தை செய்வீங்க. வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் இந்த வடகம் செய்வதற்கு நம்ம அரிசியை பயன்படுத்தாமல் அவல் சேர்த்து செய்யப் போறோம்.

அதனால ரொம்ப சீக்கிரத்துல செஞ்சுடலாம் இதுக்கு நிறைய நேரம் தேவைப்படாது. ரொம்ப ரொம்ப ஈசியா இந்த வடகம் போட்டு முடிச்சிடலாம் ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருமே இதனை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான சூப்பரான வடகம் ரெசிபியை உங்க பக்கத்து வீட்டுக்காரங்க சொந்தக்காரங்கன்னு எல்லாத்துக்குமே செஞ்சு கொடுங்க. செய்ய முடியலன்னா அவங்களுக்கு இந்த ரெசிபியை சொல்லிக் கொடுங்க கண்டிப்பா இதை செஞ்சு பார்த்துட்டு உங்களை பாராட்டுவாங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும்.

காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி கூட காய்கறிகளை சேர்த்து ஒரு சூப்பரான வடகம் செய்யலாம். இதுல பீட்ரூட் கேரட் நெல்லிக்காய் சேர்த்து இருக்கிறதால ரொம்ப ரொம்ப நல்லது. இந்த மூன்று பொருட்களிலுமே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கு. அதனால கண்டிப்பா இந்த ரெசிபியை உங்க வீட்ல செஞ்சு பாருங்க வடகம் அப்பளம் இதெல்லாம் விரும்பி சாப்பிடுறாங்க அப்படின்னா இந்த வடகமும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப வாங்க இந்த சுவையான ஏபிசி வடகம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மீதமான சாதத்தில் ருசியான வெங்காய வடகம் இப்படி செய்து பாருங்கள்! மொறு மொறுனு அசத்தலாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full