மீதமான சாதத்தில் ருசியான வெங்காய வடகம் இப்படி செய்து பாருங்கள்! மொறு மொறுனு அசத்தலாக இருக்கும்!

- Advertisement -

இந்த அப்பளம், வடகம் போன்றவற்றையெல்லாம் முன்பெல்லாம் வீட்டில் செய்து தான் சாப்பிடுவார்கள். இந்த வத்தல், வடகம் போன்றவற்றை செய்வதற்கு அனைவருமே சிரமப்படுவார்கள். ஏனென்றால் அதை காய்ச்சி, ஆற வைத்து அதன் பிறகு காய வைத்து என அதன் வேலைகள் இருக்கும். இதன் காரணமாகவே பெரும்பாலும் இவையெல்லாம் வீட்டில் செய்வதை தவிர்த்து விடுவார்கள். கஷ்டமே இல்லாமல் மிக மிக சுலபமான முறையில் சாதம் மீந்து போனதை வைத்து சுலபமாக வெங்காய வடகம் தயாரித்து வைத்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

 மீதமான சாதத்தில் வெங்காயம் சேர்த்து இப்படி வடகம் வைத்தால் அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். இந்த முறையில் மிகவும் சுலபமாக குறைந்த செலவில் அதிக வெங்காய வடகம்நாமே தயாரிக்க முடியும் இதை எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கும் போது வாசம் சாப்பிடச் சொல்லி இழுக்கும். ரசம் சாதம் சாம்பார் சாதத்திற்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். கமகம வாசத்துடன் சூப்பரான பழைய சாதம், வெங்காயம் வைத்து வெங்காய வடகம் எப்படி வைப்பது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

- Advertisement -
Print
No ratings yet

வெங்காய வடகம் | Left over Rice Onion Vadagam

இந்த அப்பளம்,வடகம் போன்றவற்றையெல்லாம் முன்பெல்லாம் வீட்டில் செய்து தான் சாப்பிடுவார்கள். இந்தவத்தல், வடகம் போன்றவற்றை செய்வதற்கு அனைவருமே சிரமப்படுவார்கள். ஏனென்றால் அதை காய்ச்சி,ஆற வைத்து அதன் பிறகு காய வைத்து என அதன் வேலைகள் இருக்கும். இதன் காரணமாகவே பெரும்பாலும்இவையெல்லாம் வீட்டில் செய்வதை தவிர்த்து விடுவார்கள். கஷ்டமேஇல்லாமல் மிக மிக சுலபமான முறையில் சாதம் மீந்து போனதை வைத்து சுலபமாக வெங்காய வடகம்தயாரித்து வைத்து கொள்ளலாம்.
Prep Time2 days
Active Time2 minutes
Course: Fry, Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Left over Rice Onion Vadagam
Yield: 4
Calories: 310kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 300 கிராம் சாதம்
  • 200 கிராம் வெங்காயம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 7 தேக்கரண்டி செத்தல் மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • 1 தேக்கரண்டி உப்பு

செய்முறை

  • வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள்அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • முதலில் செத்தல் மிளகாய், சோம்பு. மிளகு ஆகியவற்றை அரைக்கவும். அதன் பின்னர்சாதத்தையும் அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் அரைக்கவும். அரைத்த எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில்எடுத்துக் கொண்டு அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  • பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு தட்டில் அலுமினியப்பேப்பரை விரித்து அதில் இந்த உருண்டைகளை ஒன்றோடு ஒன்று ஒட்டாதபடி தட்டி வைக்கவும்,
  • இருபக்கமும் நன்கு காயும்படி திருப்பி திருப்பி வைத்து வெய்யிலில் காய வைத்து எடுக்கவும். இதைப்போல் வடகம் நன்கு காயும் வரை வைத்தெடுக்கவும்.
  • தேவையான போது எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான வெங்காய வடகம் தயார்.

Nutrition

Serving: 520g | Calories: 310kcal | Carbohydrates: 121g | Protein: 13g | Cholesterol: 0.2mg | Potassium: 350mg | Fiber: 8g