- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- mumbai
- Course
- Side Dish
ஆலு பனீர் சப்ஜி ரெசிபி என்பது அனைவரும் ஹோட்டல்களில் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். உணவில் பனீர் காய்கறி வந்தவுடன் அதன் சுவை அதிகமாகும். பன்னீர் என்பது பல வழிகளில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாகும்நீங்கள் பல வழிகளில் பனீர் செய்யலாம். ஆனால் இன்று ஆலு பனீர் சப்ஜி என்று அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான உருளை மற்றும் பன்னீர் வைத்து செய்யும் செய்முறையை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். வாங்க தை எப்படி செய்வது என்று பார்ப்போம்
Ingredients
Method
உருளைக்கிழங்கை நன்கு கழுவி, நீளவாக்கில் நறுக்குங்கள், பனீரையும் வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக்காய வைத்து சீரகம், ஏலக்காய் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும் வரை நன்கு வதக்குங்கள்.
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்குங்கள்.
அத்துடன்,பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பனீர், உருளை, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து கிளறி, சிறு தீயில் மூடிவைத்து வேகவிடுங்கள். வெந்ததும் கரம் மசாலா, மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள். சூடாக பரோட்டாவுடன் பரிமாறுங்கள்.






