வீட்டிலயே ஜம்முனு ருசியான ஆம்பூர் மட்டன் பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி' இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன. பொதுவாக பிரியாணி என்ற
பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி’ இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன. பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில் வேறுபட்ட சுவையுடன் இருக்கும். ஆனால் ஆம்பூர் மட்டன் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
அவர்களுக்காக இந்த மட்டன் பிரியாணி ரெசிபி. ஆற்காடு நவாப்கள் ஆட்சிக்காலத்தில் இந்த பிரியாணி செய்முறை வழக்கத்துக்கு வந்தது. ஹைதரபாதி நிஜாம்களின் அரண்மனைகளிலும் இதுபோன்ற பிரியாணியை செய்துள்ளனர். தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? ஒரு சுவையான சமையலை மதியம் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் இந்த ஆம்பூர் மட்டன் பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம். வாருங்கள் இந்த ஆம்பூர் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான கோதுமை ரவா மட்டன் பிரியாணி இப்படி செய்து பாருங்க! ரெம்ப ஹெல்தியான ரெசிபி!