வீட்டிலயே ஜம்முனு ருசியான ஆம்பூர் மட்டன் பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

- Advertisement -

பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக ‘பிரியாணி’ இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன. பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில் வேறுபட்ட சுவையுடன் இருக்கும். ஆனால் ஆம்பூர் மட்டன் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

-விளம்பரம்-

அவர்களுக்காக இந்த மட்டன் பிரியாணி ரெசிபி. ஆற்காடு நவாப்கள் ஆட்சிக்காலத்தில் இந்த பிரியாணி செய்முறை வழக்கத்துக்கு வந்தது. ஹைதரபாதி நிஜாம்களின் அரண்மனைகளிலும் இதுபோன்ற பிரியாணியை செய்துள்ளனர். தினமும் சாதத்திற்கு சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? ஒரு சுவையான சமையலை மதியம் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் இந்த ஆம்பூர் மட்டன் பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம். வாருங்கள் இந்த ஆம்பூர் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
3 from 3 votes

ஆம்பூர் மட்டன் பிரியாணி | Ambur Mutton Biryani Recipe In Tamil

பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்றாக 'பிரியாணி' இன்று உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. தற்போது பிரியாணி கடைகளை நோக்கி எல்லா நாட்களிலும் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரியாணி கடைகள் தோன்றி வருகின்றன. பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில் வேறுபட்ட சுவையுடன் இருக்கும். ஆனால் ஆம்பூர் மட்டன் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்காக இந்த மட்டன் பிரியாணி ரெசிபி.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Ambur Mutton Biryani
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 200 கி சீரக சம்பா அரிசி
  • 200 கி மட்டன்
  • 1/2 கப் தயிர்
  • 3 தக்காளி
  • 4 பெரிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 கப் நெய்
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1/2 கப் புதினா, கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் அரிசியை தண்ணீரில் கழுவி அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் பூண்டு விழுது, உப்பு மற்றும் மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். பின் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
  • பின் தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கவும். இதனுடன் தயிர், எலுமிச்சை சாறு, கரம் மசாலா, பிரியாணி தூள் மற்றும் மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு குக்கரை மூடி 4 விசில் விட்டு அடுப்பை அணைத்து செய்யவும். இதே நேரம் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரில் ஊற்றி கொதித்ததும் உப்பு மற்றும் அரிசியை சேர்த்து பாதியளவு வேக வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
  • பின் குக்கரை திறந்து அரிசி வேகவைத்த தண்ணீரை சேர்த்து கொதித்ததும் அரிசியை சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 105kcal | Carbohydrates: 9.1g | Protein: 42.2g | Fat: 8.6g | Saturated Fat: 1.9g | Sodium: 127mg | Potassium: 222mg | Vitamin A: 16IU | Vitamin C: 34mg | Calcium: 23mg | Iron: 30mg

இதனையும் படியுங்கள் : ருசியான கோதுமை ரவா மட்டன் பிரியாணி இப்படி செய்து பாருங்க! ரெம்ப ஹெல்தியான ரெசிபி!