அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள் ஆனால் சில குழந்தைகளுக்கு எப்படி கொடுத்தாலும் முட்டை பிடிக்காது. அவர்களுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுத்தால் தான் சாப்பிடுவார்கள். என்ன செய்தாலும் வித்தியாசமாக இருந்தால் தான் அவர்களுக்கு பிடிக்கும் அந்த வகையில் மிகவும் சத்தான இந்த முட்டையில் ஏகப்பட்ட வெரைட்டீஸ் உள்ளது.
ஆனாலும் சில குழந்தைகளுக்கு அது பிடிக்காது. அவர்களுக்காகவே இப்பொழுது நாம் முட்டை பணியாரம் ரெசிபி பார்க்கப் போகிறோம். பணியாரத்திலும் கார பணியாரம் இனிப்பு பணியாரம் என விதவிதமான பணியாரங்கள் உள்ளது. அது போர் அடித்தவர்கள் உடலுக்கு சத்தும் நாவிற்கு சுவையும் கொடுக்கக்கூடிய இந்த முட்டை பணியாரத்தை செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
முட்டை மட்டுமில்லாமல் இதில் நாம் சில காய்கறிகளையும் சேர்ப்பதால் உடலுக்கு இன்னும் ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த முட்டை பணியாரத்தை நாம் சாதத்திற்கு சைடு டிஷ் ஆகவும் அல்லது மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். மிகவும் சுவையான இந்த முட்டை பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
முட்டைப் பணியாரம் | Egg Paniiyaram Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- 1 கப் கேரட்
- 1 கப் முட்டைகோஸ்
- 1 பெரிய வெங்காயம்
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
- கறிவேப்பிலை தேவையான அளவு
- கொத்தமல்லி இலை தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பின்பு அதில்நறுக்கிய வெங்காயம் முட்டைக்கோஸ் கேரட் அனைத்தையும் சேர்த்து உப்பும் சேர்த்து நன்றாகவதக்க வேண்டும்.
- காய்கறிகள் அனைத்தும் சிறிது வெந்தவுடன் இப்பொழுதுஅதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் முட்டை சேர்த்து தேவையான அளவு உப்பு மிளகுதூள் கொத்தமல்லி இலைகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது பணியார சட்டியில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி அடுத்த வைத்த முட்டையை பணியார குழியில்கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வெந்தவுடன் எடுக்கவும்.
- சுட சுட முட்டை பணியாரம் இப்போது தயார் இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Nutrition
இதையும் படியுங்கள் : டிபன் உணவுகளுக்கான பக்காவான ருசியான வேகவைத்த முட்டை குருமா இப்படி செய்து பாருங்கள்!