Home அசைவம் டிபன் உணவுகளுக்கான பக்காவான ருசியான வேகவைத்த முட்டை குருமா இப்படி செய்து பாருங்கள்!

டிபன் உணவுகளுக்கான பக்காவான ருசியான வேகவைத்த முட்டை குருமா இப்படி செய்து பாருங்கள்!

இல்லத்தரசிகள் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை என்ன தெரியுமா? தினமும் என்ன சமைப்பது? அப்படியே கொஞ்சம் மெனக்கெட்டு சமைத்தாலும் அந்த உணவு சத்தானதாக இருக்க வேண்டும். முட்டையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச சத்துக்ளும் உடலுக்கு சேர வேண்டும். முட்டையை குழந்தைகளும் பெரியவர்களும் தவறாமல் எடுத்துகொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டையை சமைப்பீர்களா? எப்போதும் முட்டையைக் கொண்டு ஒரே மாதிரி தான் சமைத்து சாப்பிடுவீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையில் முட்டையை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள் சப்பாத்தி, சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றவாறு ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், முட்டை குருமாவை செய்யுங்கள்.

-விளம்பரம்-

இந்த குருமா செய்வது மிகவும் சுலபம். இந்த குருமாவின் ஸ்பெஷலே மசாலா சேர்த்து செய்வது தான். பொதுவாக முட்டையை வேக வைத்து கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் அவித்த முட்டையை இது போல கிரேவி, குருமா போன்று செய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். வேகவைத்த முட்டை குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.

முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை வைத்து செய்யக்கூடிய சுலபமான குழம்பு வகை. வித்தியாசமாக இப்படி ஒரு முறை முட்டை குருமா செய்து பாருங்கள். இந்த முட்டை குருமா உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதேசமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த பதிவில் முட்டை குருமா மிகவும் ருசியாக எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
4 from 2 votes

வேகவைத்த முட்டை குருமா | egg kurma recipe in tamil

இல்லத்தரசிகள் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை என்ன தெரியுமா? தினமும் என்ன சமைப்பது? அப்படியே கொஞ்சம் மெனக்கெட்டு சமைத்தாலும் அந்த உணவு சத்தானதாக இருக்க வேண்டும். முட்டையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச சத்துக்ளும் உடலுக்கு சேர வேண்டும். முட்டையை குழந்தைகளும் பெரியவர்களும் தவறாமல் எடுத்துகொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டையை சமைப்பீர்களா? எப்போதும் முட்டையைக் கொண்டு ஒரே மாதிரி தான் சமைத்து சாப்பிடுவீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையில் முட்டையை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள் சப்பாத்தி, சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றவாறு ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், முட்டை குருமாவை செய்யுங்கள். இந்த குருமா செய்வது மிகவும் சுலபம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Egg Kuruma
Yield: 4 People
Calories: 67.43kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 3 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 மூடி தேங்காய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு மிக்சியில் ‌தேங்காய் மற்றும் சிறிதளவு சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • குருமா நன்கு கொதித்ததும் வேக வைத்த முட்டையை அதில் சேர்த்து சிம்மில் வைத்து பத்து நிமிடம் வேக விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான முட்டை குருமா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 67.43kcal | Protein: 6.64g | Fat: 2.75g | Sodium: 142mg | Potassium: 138mg | Vitamin A: 270IU | Vitamin C: 4mg | Calcium: 24.72mg | Iron: 1.91mg