எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை ஆம்லெட் போட்டு அதை கட் பண்ணி திருப்பி அத ட்ரை பண்ணி அதுல ஒரு குழம்பு வச்சு சாப்பிட்டா அட்டகாசமா இருக்கும். ஆம்லெட் ரொம்ப பிடிக்கும் அப்படிங்கிற உங்களுக்கு இந்த முட்டைக்கறியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த முட்டைக்கறியை நம்ம சப்பாத்தி பூரி இட்லி, தோசை சாதம் அப்படின்னா எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.

-விளம்பரம்-

சுட சுட சாதத்துல இந்த முட்டைக்கறியை சேர்த்து சாப்பிட்டால் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு ஒரு தடவை இந்த மாதிரி முட்டைக்கறி செஞ்சு கொடுங்க அவங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் டக்குனு வந்துட்டா கூட அவங்களுக்கும் இந்த முட்டைக்கறியை 15 நிமிஷத்துல செஞ்சு கொடுத்துவிடலாம்.

- Advertisement -

அவங்களும் சாப்பிட்டு பார்த்துட்டு அசந்து போய்விடுவார்கள் அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான முட்டை கறி தான் இது. நம்ம முட்டையை வைத்து முட்டை குழம்பு ஒவ்வொரு விதமா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த முட்டை கறி இதுவரைக்கும் நம்ம சாப்பிடாத ஒரு டேஸ்ட்ல நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு டேஸ்ட்டில் அட்டகாசமா இருக்கும்.

கண்டிப்பா உங்க வீட்ல ஒரே ஒரு தடவ இந்த முட்டைக்கறியை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இந்த முட்டைக்கறியோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். குழந்தைகளோட டிபன் பாக்ஸுக்கும் கூட இந்த முட்டை கறி செஞ்சு கொடுத்து விடலாம் வேலைக்கு போறவங்களும் இதை எடுத்துட்டு போகலாம் மதியம் வைத்து சாப்பிடுவதற்கும் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான டிஃபரண்டான முட்டை கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

முட்டை கறி | Egg Curry Recipe In Tamil

சுட சுட சாதத்துல இந்த முட்டைக்கறியை சேர்த்து சாப்பிட்டால் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வீட்ல இருக்குறகுழந்தைகளுக்கு ஒரு தடவை இந்த மாதிரி முட்டைக்கறி செஞ்சு கொடுங்க அவங்க கண்டிப்பா விரும்பிசாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் டக்குனு வந்துட்டா கூட அவங்களுக்கும்இந்த முட்டைக்கறியை 15 நிமிஷத்துல செஞ்சு கொடுத்துவிடலாம். குழந்தைகளோட டிபன் பாக்ஸுக்கும் கூட இந்த முட்டை கறிசெஞ்சு கொடுத்து விடலாம் வேலைக்கு போறவங்களும் இதை எடுத்துட்டு போகலாம் மதியம் வைத்துசாப்பிடுவதற்கும் சூப்பரா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: egg curry
Yield: 5
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 கிராம்பு
  • 1 பட்டை
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் உப்பு மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்துஆம்லெட் போட்டு எடுத்துக் கொள்ளவும்
  • அதனை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதனை சேர்த்து நன்றாக பொரித்து எடுக்கவும்
  • பிறகு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து ஏலக்காய் போட்டு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்
  •  
    தக்காளி சேர்த்து அதனுடன் சோம்பு பட்டை கிராம்பு அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்து அந்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • ஒரு சின்ன பாத்திரத்தில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சிக்கன் மசாலா சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து அந்த கலவையையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
  • இப்பொழுது பொறித்து வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான முட்டை கறிதயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 235g | Sodium: 216mg | Potassium: 21mg | Vitamin A: 13IU | Vitamin C: 23.34mg

இதையும் படியுங்கள் : முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

-விளம்பரம்-