எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை ப்ரை. காலிஃப்ளவர் ஃப்ரை அப்படின்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் அசைவத்துக்கு நிகரான ஒரு காய் அப்படின்னா அது காலிபிளவர் அப்படின்னு சொல்லலாம் இந்த காலிபிளவர் வச்சு அசைவ சுவைல நிறைய ரெசிபி செய்யலாம் அந்த வகையில இன்னைக்கு நம்ம காலிஃப்ளவரையும் முட்டையையும் சேர்த்து ஒரு டிஃபரண்டான சூப்பரான டேஸ்ட்ல பிரை செய்ய போறோம்.
இந்த காலிஃப்ளவர் முட்டை ப்ரை இதுவரைக்கும் நீங்க சாப்டே இருக்க மாட்டீங்க ஒரு தடவை இப்ப சொல்ல போற இதே செய்முறை இல்ல இந்த காலிபிளவர் முட்டை ப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க எப்பவுமே அடிக்கடி இந்த காலிஃப்ளவர் முட்டை ஃப்ரை உங்க வீட்ல செய்வீங்க.
கலவை சாதங்களான தக்காளி சாதம் தயிர்சாதம் லெமன் சாதம் புளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் ஒரு பர்பெக்ட்டான காம்பினேஷனா இந்த காலிஃப்ளவர் முட்டை ப்ரை இருக்கும். வீட்ல இருக்குற பொருட்களை வைத்து சூப்பரான சுவையில இதை செஞ்சு முடிச்சிடலாம் ரொம்ப டேஸ்டா இருக்கும்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் கூட நீங்க இந்த காலிஃப்ளவர் முட்டை ப்ரை செஞ்சு கொடுக்கலாம். இந்த காலிஃப்ளவர் முட்டை ஃப்ரை செஞ்சா அதே பாத்திரத்தில் கொஞ்சம் சாதம் போட்டு கிளறி சாப்பிட்டாலும் அவ்வளவு ருசியா இருக்கும். இந்த காலிஃப்ளவர் முட்டை செய்ய நீங்க வெறும் சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம் இதுல நிறைய மசாலாக்கள் சேர்த்து இருக்கிறதால சாப்பிடுவதற்கும் ரொம்ப ருசியாவே இருக்கும். இவ்வளவு அருமையான ஒரு சூப்பரான காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்
காலிஃப்ளவர் முட்டை ப்ரை | Cauliflower egg fry In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ காலிஃப்ளவர்
- 4 முட்டை
- 3 பெரிய வெங்காயம்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
- 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1 டீஸ்பூன் சீரகத் தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்
- வெங்காயம் வதங்கிய பிறகு காலிஃப்ளவரை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா மல்லி தூள் சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- எண்ணெயிலேயே இரண்டு நிமிடம் காலிஃப்ளவர் வெந்தவுடன் தேவையான அளவு கால் கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்
- காலிபிளவர் நன்றாக வெந்ததும் ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து அதனுடன் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்து அதனையும் காலிபிளவருடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு காலிஃப்ளவர் முட்டையும் வெந்தவுடன் இறக்கினால் சுவையான காலிபிளவர் முட்டை ப்ரை தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : அடுத்தமுறை காலிஃப்ளவர் வாங்கினால் இப்படி கிரீன் காலிஃப்ளவர் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!