- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Side Dish, starters
காலிஃப்ளவர் பக்கோடா சிவப்பு கலர்ல ஒரு மொறு மொறுன்னு தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். நமக்கும் எப்பவுமே அதே மாதிரி சாப்பிட்ட ரொம்பவே போர் அடிச்சு போயிருக்கும். பொதுவா சொல்லணும் அப்படின்னா காலிபிளவர்னாலே நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். காலிஃப்ளவர்ல என்ன செஞ்சு கொடுத்தாலும் சாப்பிடுவாங்க. காலிஃப்ளவர்ல செய்த கோபி மஞ்சூரியன், காலிஃப்ளவர் குருமா ,காலிஃப்ளவர் ஃப்ரை,காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை, அப்படின்னு காலிஃப்ளவர் வச்சு எது செஞ்சு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுறவங்க நிறைய பேர் இருக்காங்க அதோட டேஸ்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்.
சைவ பிரியர்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷலான காய்கறினா அது காலிஃப்ளவர் தான். அசைவ பிரியர்களுக்கும் அசைவம் சாப்பிட முடியாத நேரத்துல இந்த காலிபிளவர் தான் அசைவ சுவைய அவங்களுக்கு கொடுக்கும். அந்த அளவுக்கு காலிஃப்ளவர் பத்தி நம்ம சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில எப்பவுமே ஒரே மாதிரி சிவப்பு கலர்ல காலிஃப்ளவர் பக்கோடா செய்யாமல் கொஞ்சம் டிஃபரண்டா மல்லிகைகள் வச்சு கிரீன் கலர்ல செய்யக்கூடிய கிரீன் காலிபிளவர் தான் இப்ப நம்ம பாக்க போறோம்.
மல்லி இலைகள் நம்ம உடம்புல இருக்க ரத்தத்தை எல்லாம் சுத்தம் பண்ணும் என்று சொல்லுவாங்க. உண்மைதான் ஆனால் அந்த கொத்தமல்லி இலைகளை நம்ம சாப்பாட்டுல பார்த்தோம் அப்படின்னா அதை எடுத்து தனியா வச்சுடுவோம் அதோட சத்துக்கள் நமக்கு கிடைக்கவே கிடைக்காது. அந்த கொத்தமல்லி இலைகளோட சத்துக்கள் முழுசா நமக்கு கிடைக்கணும் அப்படின்னா இந்த கிரீன் காலிபிளவர் செஞ்சு சாப்பிடுங்க ஆரோக்கியமாகவும் இருக்கும் டேஸ்ட் ரொம்ப அருமையாகவும் இருக்கும். ரொம்ப கம்மியான பொருட்கள் வச்சே செய்யக்கூடிய இந்த கிரீன் காலிபிளவர் சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான கலர்ஃபுல்லான கிரீன் காலிபிளவர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : வாய்க்கு ருசியா காலிஃப்ளவர் சாதம் இப்படி ஒரு தரம் செய்து கொடுத்தால் அடிக்கடி உங்களை செய்ய சொல்லி கேட்பார்கள்!
Ingredients
Method
முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்து காலிபிளவரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
பிறகு அதனுடன் கடலை மாவு அரிசி மாவு மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கலந்து வைத்துள்ள காலிஃப்ளவரை போட்டு நன்றாக வேக வைத்து எடுத்தால் மொறுமொறுப்பான கிரீன் காலிபிளவர் தயார்.






