- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
நம்மூர் கட்டு சாதத்துக்கு பெயர் போனது. பொங்கல், புளியோதரை, லெமன் ரைஸ், தயிர் சோறு என சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்கள் நாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஃப்ரைட் ரைஸ், சிக்கன் ரைஸ், செஸ்வான் ஃப்ரைடு ரைஸ் என்று நம் நாக்கு பழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சரி இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று கான்டினென்டல் ஏன் வீட்டிலேயே ட்ரை பண்ணக்கூடாது என்று நினைப்பவர்களுக்குத் தான் இந்த ரெசிபி. காலிஃப்ளவர் சாதம் நீங்கள். இரண்டு விதமான முறைகளில் செய்யலாம். காலிஃப்ளவரை லேசாக வதக்கி அரிசியுடன் சேர்த்து வேக வைக்கலாம் அல்லது உப்பு, மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயில் வறுத்து வைத்துவிட்டு பின்னர் சாதம் தயார் ஆனதும் அதனுடன் கலந்து பரிமாறலாம். இரண்டு முறைகளுமே சுவையாக இருக்கும். இதில் காலிஃப்ளவர் உடன் வேறு விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான காலிபிளவர் சாதம் சுலபமான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
இது வழக்கமான முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, சுவையும் அபாரமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை இருக்கும். காலிஃப்ளவர் சாதம் மதிய உணவுக்கு ஏற்ற ஒரு சூப்பரான சாத வகை. இதை எளிமையான முறையில் குக்கரில் 30 நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம். குக்கரில் செய்ய விரும்பாதவர்கள் மூடி போட்ட பாத்திரத்தில் செய்யலாம். வழக்கமான சாதத்தைவிட இது போன்ற சாதத்தை செய்யும்போது நமது லஞ்ச் பாக்ஸ் சீக்கிரம் காலியாகிவிடும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். இது உருளைக்கிழங்கு வருவல், மற்றும் சிப்ஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு உணவுக்கு ஏற்ற ருசியான காலிஃப்ளவர் பராத்தா இப்படி செய்து பாருங்க இதன் ருசியே தனி ருசி!!
Ingredients
Method
முதலில் காலிஃபிளவருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பாசுமதி அரிசியை தண்ணீரில் நன்கு அலசி பின் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி மொக்கு, பிரிஞ்சி இலை, சீரகம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மஞ்சள்தூள் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்த அரிசி, காலிஃபிளவர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து நெய் விட்டு கலந்து விடவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான காலிஃபிளவர் சாதம் தயார்.






