பராத்தா அப்படின்னு அது சப்பாத்தி மாதிரியே செய்கிற ஒரு உணவு. இந்த பராத்தாக்கள் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ஏன்னா இந்த பராத்தாக்களில் நாம காய்கறிகள் இல்ல ஏதாவது ஒரு அசைவ பொருளை சேர்த்து அந்த பராத்தக்களை சப்பாத்தி மாதிரி போட்டு சமையல் செய்வோம். பராத்தா அப்படினா எல்லாருக்குமே பிடித்த உணவுகளில் முதல் இடத்தில் வரும்.
அப்படி பராத்தாகளில் பல வகை பராத்தாகள் இருக்கு. இப்படி பராத்தாக்களில் பல வகைகள் இருந்தாலும் இப்ப நம்ம செய்ய போறது நம்ம எல்லாருக்கும் ரொம்பவே புடிச்ச பராத்தா. இந்த கோபி பராத்தா ரொம்பவே பிடிக்கும். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியான இந்த பராத்தாவை எப்படி செய்யறது அப்படின்னு நம்ம தெரிஞ்சுக்க இருக்கோம்.
இந்த பராத்தால நம்ம என்ன வெஜிடபிள் யூஸ் பண்ணி பண்ண போறோம் அப்படின்னா காலிஃப்ளவர். கோபி அப்படினா காலிஃப்ளவர். இந்த காலிஃப்ளவர் பராத்தா எப்படி ருசியா சுவையா செய்றது அப்படிங்கிறத பார்க்கலாம். இந்த சுவையான பராத்தாவ செய்து சாப்பிட குடுத்தா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். குடும்பத்துல இருக்க எல்லாருக்குமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. காரணம் இதுல காலிஃப்ளவர் சேர்த்து செய்யும் போது அதோடு சுவை இன்னுமே அதிகமா இருக்கும். அதனால இந்த கோபி பராத்தாவை நம்ம எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம் வாங்க.
காலிஃப்ளவர் பராத்தா | Cauliflower parotta recipe in tamil
Equipment
- 1 தோசைகல்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் கோதுமை மாவு
- 1 காலிஃப்ளவர்
- 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
- 1/2 ஸ்பூன் மல்லிதூள்
- 1/4 ஸ்பூன் கரமசாலா
- 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1/4 ஸ்பூன் சீரகதூள்
- 1/4 ஸ்பூன் ஓமம்
- கொத்தமல்லி சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் காலிஃப்ளவர் நறுக்கி சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து கழுவி விட்டு பின் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு வேக வைத்து எடுத்துள்ள காலிஃப்ளவரை நன்றாக மசித்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ளவும்.
- பிறகு வேக வைத்துள்ள காலிஃப்ளவரில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பிறகு அதில் ஓமத்தை கசக்கி அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு கோதுமை மாவை அந்த காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
- பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக எடுத்து பூரி தேய்ககும் கல்லில் சப்பாத்திகளாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை தோசை கல்லில் சேர்த்து மேலே லேசாக என்னை தடவி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்படி அனைத்து சப்பாத்திகளையும் சுட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாருக்கும் பிடித்த சுவையான சுலபமான காலிஃப்ளவர் பரோட்டா தயார். சூடாக பரிமாறினால் சுவை அதிகமாக இருக்கும்.