- Prep
- 10 min
- Cook
- 15 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Appetizer, snacks
மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல போய் வாங்குறதுக்கு விருப்பம் இல்லாம இருக்கிறவங்க வீட்ல நம்ம எப்பவுமே அரைச்சு வச்சிருக்கக் கூடிய இட்லி மாவு வச்சு சூப்பரான ஒரு இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க. எந்த மாவும் அரைக்காமல் இன்ஸ்டன்ட்டா செய்யக்கூடிய இந்த இட்லி மாவு போண்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
இந்த இட்லி மாவு போண்டா கூட ஏதாவது உங்களுக்கு புடிச்ச தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி வச்சு சாப்பிடுங்க டேஸ்ட் இன்னுமே அல்டிமேட்டா இருக்கும். இத செய்றதுக்கு பத்து நிமிஷம் போதும் டக்குனு மாவு கலந்து சூப்பரா இந்த இட்லி மாவு போண்டா செஞ்சுடலாம். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இதை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
கடைகளில் போய் நிறைய காசு கொடுத்து போண்டா வடை வாங்காம ஈஸியா சட்டுனு நம்ம வீட்டிலேயே இந்த சூப்பரான இட்லி மாவு போண்டாவ செஞ்சிடலாம். மாலை நேரத்தில் டீ, காபியோட இந்த ஸ்னாக்ஸ் வைத்து சாப்பிடுவதற்கு செம சூப்பரா இருக்கும். இதுல நம்ம வெங்காயம் சேர்த்து செய்றதால சாப்பிடறதுக்கு நல்லா மொறுமொறுன்னு சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான இட்லி மாவு போண்டா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : மீந்து போன இட்லியில் இனி ருசியான இட்லி முட்டை உப்புமா இப்படி செய்து பாருங்க உப்புமா மிச்சமாகாது!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு மைதா மாவு அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை பேக்கிங் சோடா சீரகம் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறு உருண்டைகளாக எடுத்து பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான இட்லி மாவு போண்டா தயார்.






