நெத்திலி மீன் குருமா இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!
அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன, சின்ன மீன் வகைகளில் தான் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. , நெத்திலி மீனில் ஃபேட்டி அமிலங்கள், வைட்டமின்கள் E, D வைட்டமின் பி நியாஸின் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவை
அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன, சின்ன மீன் வகைகளில் தான் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. , நெத்திலி மீனில் ஃபேட்டி அமிலங்கள், வைட்டமின்கள் E, D வைட்டமின் பி நியாஸின் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.. அதனால், அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு மட்டுமின்றி சருமமும் பொலிவோடு அழகாக இருக்கும்.
நெத்திலி மீன் இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை வழக்கம் போல் புளி சேர்க்காமல்,நெத்திலி மீன் குருமா சமைக்க போகின்றோம். நெத்திலி மீன் குருமா என்றதும் எப்படி ருசி இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு பாரம்பரியமான மீன் குழம்பு ரெசிபி தான். பாரம்பரியமான முறையில் செய்து கொடுத்த உணவுகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானதாக, ருசியானதாக இருந்திருக்கிறது. சுலபமாக இந்த நெத்திலி மீன் குருமா குழம்பை செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.