நெத்திலி மீன் குருமா இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

- Advertisement -

அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன, சின்ன மீன் வகைகளில் தான் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. , நெத்திலி மீனில் ஃபேட்டி அமிலங்கள், வைட்டமின்கள் E, D வைட்டமின் பி நியாஸின் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.. அதனால், அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு மட்டுமின்றி சருமமும் பொலிவோடு அழகாக இருக்கும்.

-விளம்பரம்-

நெத்திலி மீன் இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை வழக்கம் போல் புளி சேர்க்காமல்,நெத்திலி மீன் குருமா சமைக்க போகின்றோம்.  நெத்திலி மீன் குருமா என்றதும் எப்படி ருசி இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு பாரம்பரியமான மீன் குழம்பு ரெசிபி தான். பாரம்பரியமான முறையில் செய்து கொடுத்த உணவுகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானதாக, ருசியானதாக இருந்திருக்கிறது. சுலபமாக இந்த நெத்திலி மீன் குருமா குழம்பை செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
No ratings yet

நெத்திலி மீன் குருமா | Anchovies Fish Kuruma Recipe In Tamil

நெத்திலி மீன் குருமா, இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை வழக்கம் போல் புளி சேர்க்காமல்,நெத்திலி மீன் குருமாசமைக்க போகின்றோம்.  நெத்திலி மீன் குருமா என்றதும்எப்படி ருசி இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு பாரம்பரியமான மீன் குழம்புரெசிபி தான். பாரம்பரியமான முறையில் செய்து கொடுத்த உணவுகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானதாக,ருசியானதாக இருந்திருக்கிறது. சுலபமாக இந்த நெத்திலி மீன் குருமா குழம்பை செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Anchovies Fish Kuruma
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ நெத்திலி மீன்
  • 1/2 மூடி தேங்காய்
  • 10 பச்சை மிளகாய்
  • 2 வெங்காயம்
  • 2 நாட்டுத் தக்காளி
  • 2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 புளிப்பு மாங்காய்
  • 1 கையளவு கொத்தமல்லி

செய்முறை

  • வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி மிளகாயை கொள்ளவும். பச்சை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
  • வாழை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி கொள்ளவும். தேங்காயுடன் சோம்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
  • மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் மாங்காய், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.சுவையான நெத்திலி மீன் குருமா ரெடி.

Nutrition

Serving: 200g | Calories: 240kcal | Carbohydrates: 11g | Protein: 29g | Sodium: 321mg