Advertisement
சைவம்

காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல் ஒருமுறை இதே முறையில் செய்து பார்க்கலாம்!

Advertisement

வெறும் கீரையை வைத்து மட்டும் இந்த மசியல் செய்யப் போகின்றோம். இதனுடன் பருப்பு, வெங்காயம் எதுவுமே சேர்க்க போவது கிடையாது. கீரை வேக வைத்து  விட்டு மைய கடைந்து விட்டால் போதும். சுவையான சத்து நிறைந்த பச்சை கீரை மசியல் தயார். ஆரம்பத்தில் சமைக்க பழகுபவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த ரெசிபியை நிச்சயம் எல்லோரையும் ஒரு முறை செய்து பார்க்கவேண்டும்.

உடல் ஆரோக்கியமாக இருக்க வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அத்தகைய கீரையை பலவாறு செய்து சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு கீரையைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் மசியல் செய்யத் தெரியுமா? இல்லையெனில் இதே முறையில் ஒரு முறை இப்படி செய்தல் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

Advertisement

கீரையை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும்,எடையைக் குறைக்கவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உதவுகிறது. கீரையில் குறைந்த கிளை செமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) இருப்பதால், இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும்

 இங்கு அந்திரா ஸ்டைலில் எப்படி கீரை மசியல் செய கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருநதது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆந்திரா கீரை மசியல் | Andhra Keerai Masiyal Recipe In Tamil

Print Recipe
உடல் ஆரோக்கியமாக இருக்க வாரம் ஒருமுறை கீரையை
Advertisement
உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அத்தகைய கீரையை பலவாறுசெய்து சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு கீரையைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் மசியல் செய்யத்தெரியுமா? இல்லையெனில் இதே முறையில் ஒரு முறை இப்படி செய்தல் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.  இங்கு அந்திராஸ்டைலில் எப்படி கீரை மசியல் செய கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துஎப்படி இருநதது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Andhra Keerai Masiyal
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 207

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3 கப் பசலைக்கீரை/அரைக்கீரை
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையானஅளவு

வறுப்பதற்கு

  • டீஸ்பூன் எண்ணெய்
  • 2 வரமிளகாய்
  • டீஸ்பூன் சீரகம்
  • 6 பற்கள் பூண்டு

தாளிப்பதற்கு

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்

Instructions

  • கீரை நன்கு சுத்தம் செய்யவும். மற்ற தக்காளி பச்சைமிளகாய்யை தயாராக எடுத்து வைக்கவும்.
  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கீரை, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
  • பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கீரையில் சேர்த்து, சிறிது உப்பையும் சேர்க்க வேண்டும்.
  • பின்பு கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு மசிக்கலாம் அல்லது மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ளலாம்.
  • சுவையான ஆந்திரா கீரை மசியல் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 207kcal | Carbohydrates: 37.7g | Protein: 37.7g | Fat: 4g | Fiber: 4.1g | Calcium: 115mg | Iron: 2.4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

8 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

8 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

9 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

10 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

14 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

14 மணி நேரங்கள் ago