ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் போதும் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் தீர்ந்து விடும்!

கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு

By Prem Kumar · 12/8/2024

கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு விசயத்திற்காக கடன் வாங்கியிருப்பார்கள். கடனை தீர்க்க எந்த வழியும் தெரியாமல் தடுமாறுவார்கள். எவரும் மகிழ்ச்சியாக விருப்பத்துடன் கடன் வாங்குவதில்லை. ஆனால் சில நேரங்களில் தாங்கள் சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுது தான்‌ கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

நாம் ஒவ்வொருவருக்கும் கடன் பிரச்சனைதான் பெரிய பிரச்னையாக இருக்கும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும். அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்து என்ன சொல்லித் திட்டி கடனை திருப்பி கேட்பார்கள் என்று மனது எப்பொழுதும் கவலையுடனும், படபடப்புடனுமே இருக்கும். கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர்.

ஆஞ்சநேயர் வழிபாடு

கடன் வாங்க காரணமாக இருப்பது கேதுவும், செவ்வாயும் தான். ஆஞ்சநேயருக்கு கேதுவை வெல்லக்கூடிய சக்தி உண்டு. அனுமனை வணங்க கடன் பிரச்சினை எளிதில் தீரும். கடன் சுமை அதிகரிக்கவும், அதனால் ஏற்படும் சுமை, கஷ்டங்கள் இந்த கிரகத்தின் பாதிப்பால் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே ஆஞ்சநேயருக்கு முன்பாக நாம் பரிகாரம் செய்து வழிபட்டால் நம்முடைய கடன் சுமை அனைத்தும் படிப்படியாக குறையும் என்று சொல்லப்படுகிறது.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு நல்லெண்ணெய், 1/2 கிலோ வெல்லம், 1/4 கிலோ கருப்பு உளுந்து, ஒரு சிகப்பு நிற துணி ஆகியவை தேவை. இதனை வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லுங்கள். இந்த பரிகாரத்தை சிவன் கோயிலில் இருக்கும் ஆஞ்சநேயர் முன் தான் செய்ய வேண்டும். கோவிலுக்குச் சென்று பூசாரியிடம் நல்லெண்ணைய் மற்றும் சிவப்பு நிற துணியையும் கொடுத்து ஆஞ்சநேயருக்கு எண்ணெய் காப்பு சாற்ற சொல்ல வேண்டும்.

பின்னர் அங்கு இருக்கும் மடப்பள்ளியில் வெல்லத்தையும் உளுந்தையும் பிரசாதம் செய்வதற்காக கொடுத்து விடுங்கள். ஆஞ்சநேயர் முன்னால் ஒரு நெய் தீபத்தை ஏற்றிவிட்டு உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். இதனை எந்த நாள் கிழமையிலும் செய்யலாம்.

இந்த வழிபாட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும். மனச்சங்கடங்கள் விலகும். பதவி உயர்வு கிடைக்காமல் இருப்போருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும். இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் ஆஞ்சநேயரை வழிபட்டு உங்களின் கடன் சுமையிலிருந்து மீண்டு நல்லதொரு சந்தோஷமான வாழ்க்கை வாழுங்கள்.

இதனையும் படியுங்கள் : பெரிய பெரிய பணக்காரர்கள் பணம் சேர யாருக்கும் தெரியாமல் செய்யும் இரகசிய பரிகாரம்!

Recipes AMP · Quick view
View full