Advertisement
அசைவம்

நாவில் எச்சி ஊறும் அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

ஒரே மாதிரியான பிரியாணி வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும். அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள்

இதையும் படியுங்கள் : மணமணக்கும் பிரியாணி மசாலா பொடி இப்படி செஞ்சி பாருங்க ?

Advertisement

அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி | Arapian Chicken Manthi Biriyani

Print Recipe
ஒரே மாதிரியான பிரியாணி வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course LUNCH
Cuisine Arabic
Keyword Biriyani, பிரியாணி
Prep Time 10 minutes
Cook Time 40 minutes
Total Time 50 minutes
Servings 4 People
Calories 130

Equipment

  • 1 பெரிய பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 தவா
  • 2 பவுள்

Ingredients

மந்தி பொடி செய்ய

  • 1 Tbsp ஏலக்காய்
  • 1 Tbsp லவங்கம்
  • 1/2 Tbsp மிளகு
  • 1/2 Tbsp இஞ்சி பொடி
  • 2 பிரியாணி இலை

மந்தி பிரியாணி செய்ய

  • 1/2 KG சிக்கன்
  • 2 கப் பாஸ்மதி அரிசி
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • 1 பச்சை மிளகாய்
  • 1 Tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பிரியாணி இலை
  • 1 Tsp நெய்
  • 2 ஏலக்காய்
  • 2 பட்டை
  • 1 லவங்கம்
  • 1 Tsp மிளகு
  • 2 Tbsp வெண்னெய்
  • 3 கப் தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி விட்டு 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மந்தி பொடிக்கு தேவையான பொருட்களை மிதமான தீயில் வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
    Advertisement
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
  • அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு சேர்த்து கிளற வேண்டும். பின் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அரைத்து அதில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
  • பின் அதில் சிக்கன் மற்றும் மந்தி பொடியை சேர்த்துவிட்டு கால் பாகம் வைக்க வேண்டும். 3 கப் தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  • பின்னர் அதில் உள்ள சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து இதில் அரிசியினை சேர்த்து நன்கு வேகவிட வேண்டும்.
  • வெந்ததும் சாதத்தின் நடுவில் ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி, அதில் கறித்துண்டு ஒன்று போட்டு மூடி வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு மீதி உள்ள மந்தி பொடி மற்றும் வெண்ணெயை வேக வைத்துள்ள சிக்கன் மேல் தடவி தவாவில் போட்டு பொன்னிறமாக வேக வைக்க வேண்டும்.
  • வேக வைத்த அரிசியுடன் சிக்கனை வைத்து சூடாக பரிமாற வேண்டும்.சுவையான அரேபியன் சிக்கன் மந்தி பிரியாணி ரெடி.

Nutrition

Serving: 800G | Calories: 130kcal | Carbohydrates: 46g | Protein: 21g | Fat: 1g | Saturated Fat: 0.1g | Sodium: 2.7mg | Potassium: 382mg | Fiber: 2g | Sugar: 0.1g
Advertisement
Prem Kumar

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

10 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

11 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

13 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

15 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

16 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

17 மணி நேரங்கள் ago