மணமணக்கும் பிரியாணி மசாலா பொடி இப்படி செஞ்சி பாருங்க ?

- Advertisement -

நாம் அசைவம் மற்றும் சைவம் என எந்த வித உணவுகள் செய்தாலும் நாம் செய்யும் உணவுகளின் மணம் மற்றும் சுவையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது. நாம் சேர்க்கும் மசாலா பொருட்கள் தான் இதில் பெரும்பாலும் நாம் செய்யும் அசைவ உணவுகளின் அதன் சுவையை கூட்டி தருவது இந்த மசாலா பொருட்கள் தான். அந்த வகையில் பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் பிரியாணி என்று தான் கூறுவார்கள்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் பொடி செய்வது எப்படி ?

- Advertisement -

ஆகையால் இன்று நாம் சுவையான பிரியாணி செய்வதற்கு அதில் சேர்க்கும் பிரியாணி மசாலா எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். இந்த பிரியாணி மசாலாவை வீட்டில் இருக்கும் மூன்று பொருட்களை வைத்து எளிமையாகவும் வேகமாகவும் செய்து விடலாம். அடுத்த முறை நீங்கள் இதுபோன்று செய்து பிரியாணி மசாலா செய்து பிரியாணி செய்து பாருங்கள் அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பிரியாணி மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

50 கிராம் – பட்டை
30 கிராம் – ஏலக்காய்
25 கிராம் – லவங்கம்

செய்முறை

நாம் மேலே கொடுத்துள்ள பொருள்களை துல்லியமான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் நீங்கள் கடையில் வாங்கும் போது இந்த அளவை சொல்லி துல்லியமாக வாங்கிக் கொள்ளுங்கள்.
வாருங்கள் பிரியாணி மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தீயை மிதமாக ஏரிய விட வேண்டும் இல்லையென்றால் நாம் சேர்த்த பொருட்கள் முற்றிலும் கருகி போய் விடும். அதனால் தீயை மிதமாக ஏரிய விட்டு கொள்ளுங்கள்.

பின் கடாயிலன 50 கிராம் அளவு பட்டை, 30 கிராம் ஏலக்காய் மற்றும் கடைசியாக 25 கிராம் லவங்கம் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து வறுக்கவும். நாம் சேர்த்த பொருள்கள் அதிகமாக சூடேறாமல் குறைந்த அளவு சூடேறும் வரை மட்டும் வறுத்துக் கொள்ளுங்கள்.

பின் வறுத்த பொருட்களை ஒரு அரை மணி நேரம் வெயிலில் காய வைத்து அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த மசாலாவை ஒரு தட்டில் சேர்த்து பொடியை நன்றாக பரப்பி விட்டு குளிர வையுங்கள்.

-விளம்பரம்-

பின் டபிரியாணி மசாலா நன்றாக குளிர்ந்ததும் ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து. பின் சமையலுக்கு பயன்படுத்தலாம். இந்த பொடியை பயன்படுத்தி நீங்கள் செய்யும் பிரியாணி அட்டகாசமான முறையில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here