நாம் எந்தவித சமையல் செய்தாலும் அதில் நாம் சேர்க்கும் மசாலா பொடிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனனென்னில் சமையலுக்கு நாம் சேர்க்கும் அனைத்து மசாலா பொருட்கள் தான் நாம் செய்யும் உணவுகளின் நிறம், சுவை மற்றும் மணத்தை தருகிறது. அந்த வகையில் அசைவ உணவு தான் நாம் அனைவரும் மிகவும் விரும்பும் படியான உணவு.
இதையும் படியுங்கள் : ஸ்ரீரங்கம் அய்யர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி ?
ஏனென்றால் அதில் சேர்க்கப்படும் மசாலா தான் அதன் சுவைக்கும் மனத்திற்கும் காரணம். அது போல் சைவ உணவுகளில் சாம்பார் அனைவரும் விரும்பும் ஓரு குழம்பு அதில் நாம் சேர்க்கும் சாம்பார் பொடி முக்கியம். அதற்காக கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் சாம்பார் பொடி வாங்குவதற்கு பதிலாக. நீங்கள் வீட்டிலேயே இந்த சாம்பார் பொடி தயார் செய்து கொள்ளலாம். இன்று எப்படி சாம்பார் பொடி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
250 கிராம் மல்லி
250 கிராம் வரமிளகாய்
100 கிராம் சீரகம்
50 கிராம் மிளகு
50 கிராம் கடலை பருப்பு
50 கிராம் துவரம் பருப்ப
20 கிராம் வெந்தயம்
10 கிராம் பெருங்காயம்
செய்முறை விளக்கம்
முதலில் சாம்பார் பொடி செய்வதற்காக எடுத்துக் கொண்ட பொருட்களை ஒரு தடிமனான கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் ஒவ்வொரு பொருளாக வறுத்து ஒன்று சேர்க்க வேண்டும். முதலில் 250 கிராம் மல்லியை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின் மல்லி நன்றாக வறுபடும் வரை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். பின் மணம் வர தொடங்கியதும் மல்லியை ஒரு பெரிய தட்டில் சேர்த்துக் கொள்ளவும். பின்பு நாம் எடுத்துக் கொண்டுள்ள 250 கிராம் வர மிளகாயை கடாயில் சேர்த்து மிளகாய் கருகாமல் நன்கு கிளறிவிட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.
வர மிளகாயும் நன்கு வறுபட்டதும் அதனையும் பெரிய தட்டில் சேர்த்து விட்டு. மீண்டும் கடாயில் நாம் எடுத்துக் கொண்ட 100 கிராம் சீரகத்தை சேர்த்து வறுத்துக் கொள்ளவும், சீரகம் நன்கு வறுபட்டு மணம் வர தொடங்கியதும் அதையும் பெரிய தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நாம் எடுத்துக் கொண்ட 50 கிராம் மிளகை கடாயில் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். மிளகும் நன்கு வறுபட்டு வந்ததும் அதனையும் பெரிய தட்டில் சேர்த்துக் கொண்டு. பின் கடாயை அடைப்பில் வைத்து நாம் வைத்து இருக்கும் 50 கிராம் கடலைப்பருப்பு மற்றும் 50 கிராம் துவரம்பருப்பை கடாயில் ஒன்றாக சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பருப்பு நன்றாக சிவக்கும் வரை வறுத்து பெரிய தட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் வெந்தயம் 20 கிராம் எடுத்து கடாயில் சேர்த்து வெந்தயத்தையும் நன்கு வறுத்து அதன் பின் பெரிய தட்டில் இதையும் சேர்த்து தட்டி விடுங்கள். பின் கடைசியாக 10 கிராம் பெருங்காயம் கட்டிகளை கடாயில் சேர்த்து பெருங்காயம் பொரிந்து வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு வருத்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக குளிர வைத்து அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் மணமனக்கும் அய்யர் வீட்டு சாம்பார் பொடி இனிதே தயார்.