- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Kulambu
வத்த குழம்பு என்றால் யாரும் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டார்கள் மாறாக அனைவர் வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை ஸ்ரீரங்கம் அய்யர் வீட்டு ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். ஏனெனில் அய்யர் வீடுகளில் பக்குவமாக செய்யும் வத்த குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : மறுமுறை வைக்க தோன்றும் மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ?
இங்கு ஸ்ரீரங்கம் வத்தக்குழம்பை எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் இதை படித்து பார்த்து உங்கள் வீட்டில் சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாகவும் இருக்கும் அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள். இந்த வாரம் ஒரு நாள் ட்ரைப் பன்னி பாருங்கள்.
Ingredients
Method
முதலில் எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கரைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து பொடி செய்துக் கொள்ளவும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி,மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, அவற்றை குளிர வைத்து மிக்சியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணைய் ஊற்றி எண்ணைய் காய்ந்ததும், கடுகு சேர்த்து வெடித்ததும், உளுத்தம் பருப்பு, மற்றும் கடலைப் பருப்பு, சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடி,மற்றும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்எண்ணைய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி!!!






